X

திராவிட மாடல் ஆட்சிதான் தமிழகத்தில் மீண்டும் வரவேண்டும் – கி.வீரமணி

தருமபுரியில் திராவிடர் கழகம் சார்பில் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திராவிட கழக தலைவர் கி.வீரமணி, ‘இதுதான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. ஆட்சி, இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி’ என்ற தலைப்பில் மேலும் பேசியதாவது:-
தமிழகத்தில் திராவிட இயக்கமும், திராவிட மாடல் ஆட்சியும் இல்லை என்றால், நாம்யாரும் தலை நிமிர்ந்து நடக்க முடியாது. குற்றப்பரம்பரை என ஒரு பிரிவு இருந்ததை, சீர்மரபினர் என முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தான் மாற்றினார். அதேபோல திருநங்கைகள், பெண்களுக்கான அங்கீகாரத்தை அளித்தது திராவிட மாடல் ஆட்சிதான். எங்கெல்லாம் அநீதி ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் சமூக நீதி வேண்டும் என்பதற்கு தான் டாக்டர் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றினார்.

தமிழக்தின் கவர்னர் எதிர்க்கட்சிகளை போல வெளிநடப்பு செய்கிறார். இவை சட்டப்படி தவறு. எனவே தான் அடுத்த ஆண்டு முதல் சட்டப் பேரவையில் கவர்னர் உரையே இருக்காது என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு எத்தனை முறை பிரதமர் மோடி வந்தாலும், பா.ஜ.க.வால் ஏதும் செய்ய இயலாது. மண், மக்களை பாதுகாக்க திராவிட மாடல் ஆட்சிதான் தமிழகத்தில் மீண்டும் வரவேண்டும் என்றார்.

Tags: dkveeramani