X

புனித யாத்திரை தொடங்குவதற்கு முன்பே அமர்நாத் குதைக் கோயிலில் உருவான பனி லிங்கம்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் புனித யாத்திரை தொடங்குவதற்கு முன்னதாகவே, இயற்கை வடிவிலான பனி லிங்கமான ‘பாபா பர்பானி’யின் (Baba Barfani) முதல் தரிசனம் பக்தர்களுக்குக் கிடைத்துள்ளது.

இமயமலையின் பனிச்சூழ்ந்த மலைப்பகுதிகளுக்கு இடையே, கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தக் குகைக் கோயிலில், தற்போதே பனி லிங்கம் முழுமையான வடிவத்துடன் பிரம்மாண்டமாகத் தோன்றி காட்சியளிப்பது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான சிவபக்தர்கள் அலைகடலெனத் திரண்டு வரும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு மற்றும் இதர அடிப்படை வசதிகளைத் தயாரிக்கும் பணிகளில் ஜம்மு காஷ்மீர் நிர்வாகமும், பாதுகாப்புப் படையினரும் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.