X

சீக்கிரமாக உறங்குவதன் அவசியம்! – ஆதாரத்தை படம்பிடித்து பாஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாதனை

தூக்கத்தின் போது மூளை தன்னைத்தானே தூய்மைப்படுத்திக் கொள்ளும் ‘கிளீனிங்’ (Brain-cleaning) செயல்முறையை அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முதன்முறையாகப் படம்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, மூளையில் உள்ள நியூரான்கள் அமைதியடைகின்றன; அந்தச் சில நொடிகளில் ரத்தம் மூளையை விட்டு வெளியேற, அந்த இடத்திற்கு ‘செரிப்ரோஸ்பைனல் திரவம்’ (Cerebrospinal Fluid – CSF) அலைகளைப் போல உள்ளே பாய்கிறது. இந்தத் திரவம் மூளையில் உள்ள நச்சுக்களையும், குறிப்பாக அல்சைமர் நோய்க்கு காரணமான ‘பீட்டா-அமிலாய்டு’ (Beta-amyloid) போன்ற கழிவுகளையும் கழுவி வெளியேற்றி, அடுத்த நாள் சிந்திப்பதற்கும் கற்றலுக்கும் மூளையைத் தயார் செய்கிறது.

விழிப்புடன் இருக்கும்போது இந்தச் சுத்திகரிப்பு நடைபெறுவதில்லை என்பதால், போதிய உறக்கம் இல்லையெனில் மூளையின் செயல்திறன் குறைந்து புத்திசாலித்தனம் மழுங்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, மூளை புத்துணர்ச்சியுடன் இருக்க சீக்கிரம் உறங்கச் செல்வது அவசியம்!