X

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலின் சித்திரை பிரம்மோற்சவ முக்கிய வைபவங்கள் இன்று இரவுடன் நிறைவு

சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் கோயிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த மே 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ‘போர்வை களைதல்’ சடங்கு, எம்பெருமான் தன் திருமுக மண்டலத்தின் அழகை பக்தர்களுக்குத் தெளிவாகக் காட்டும் ஒரு சிறப்பான வைபவமாகும். பிரம்மோற்சவ நாட்களில் பல்வேறு வாகனங்களில் மாடவீதிகளில் உலா வரும் பார்த்தசாரதி பெருமாள், இன்று (மே 9) காலை ஆளும் பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

பகல் 11 மணிக்குத் தீர்த்தவாரி நடைபெற்ற நிலையில், இன்று இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவத்தின் முக்கிய வைபவங்கள் நிறைவடைகின்றன. நாளை (மே 10) இரவு சிறிய திருத்தேர் (சப்தாவர்ணம்) நிகழ்வுடன் விழா முழுமையாகச் சாற்றுமுறை பெறுகிறது.