X

தனிஷ்க் நடிகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான மீனாட்சியின் இன்ஸ்டா பின் தொடர்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

மதுரையில் நடைபெற்ற புகழ்பெற்ற தனிஷ்க் (Tanishq) நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சரான மீனாட்சி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் குற்ற வழக்கில் சிக்கிய செய்தி பரவியதைத் தொடர்ந்து அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஃபாலோயர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மீனாட்சி கைது செய்யப்படுவதற்கு முன்பு சுமார் 1.52 லட்சம் (152K) பின்தொடர்பாளர்களை மட்டுமே கொண்டிருந்தார். ஆனால், அவர் நகைக்கடை திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட செய்தி ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, ஒரே நாளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புதிய பயனர்கள் அவரைத் தொடரத் தொடங்கினர்.

தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோயர்களின் எண்ணிக்கை சுமார் 1.64 லட்சமாக (164K) உயர்ந்துள்ளது. குற்ற வழக்குகளில் சிக்குபவர்களுக்கும், பரபரப்பான செய்திகளில் அடிபடுபவர்களுக்கும் உடனடியாக இணையத்தில் மவுசு அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிரபலப்படுத்தும் இதுபோன்ற மனநிலை எங்கு போய் முடியும் என்று பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.