X

மோடி மற்றும் அமித்ஷா ஆட்சி முடியப் போகிறது – அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரது ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது, என்று தெரிவித்துள்ளார்.

சஞ்சை ராவத் எழுதிய புத்தகம் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், “2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரதமர் மோடியின் ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது. மோடியும், அமித்ஷாவும் விடைபெற இருக்கிறார்கள், அவர்களின் ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது.” என்று தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த பேச்சு இந்தி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.