கவர்னர் ஆர்.என்.ரவி கிண்டியில் உள்ள அவரது மாளிகையில் குடியரசு தினத்தையொட்டி தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று மாலை 4.30 மணிக்கு தேநீர் விருந்து நடைபெறுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
மேலும், தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர், அமைச்சர்கள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரும், துணை முதல்வரும் இன்று மாலை தஞ்சையில் நடக்கும் திமுக மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
அதனால், முதலமைச்சர் பங்கேற்காதது உறுதியான நிலையில் அமைச்சர்களும் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் அதிகாரிகள் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளனர். திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரின் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.