X

இன்று ‘தேசிய குடிமைப் பணிகள் தினம்’ !

இந்தியாவின் நிர்வாக முதுகெலும்பாக விளங்கும் குடிமைப் பணி அதிகாரிகளைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21-ஆம் தேதி ‘தேசிய குடிமைப் பணிகள் தினம்’ கொண்டாடப்படுகிறது.

1947-ஆம் ஆண்டு இதே நாளில், டெல்லி மெட்காஃப் ஹவுஸில் சுதந்திர இந்தியாவின் முதல் குடிமைப் பணி அதிகாரிகளிடையே உரையாற்றிய சர்தார் வல்லபாய் பட்டேல், அவர்களை ‘இந்தியாவின் இரும்புச் சட்டம்’ (Steel Frame of India) என்று வர்ணித்தார்; அந்த வரலாற்றுச் சிறப்பை நினைவுகூரும் வகையில் 2006-முதல் இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

2026-ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் (Theme), டிஜிட்டல் ஆளுகை மற்றும் லட்சிய மாவட்ட மேம்பாடு ஆகியவற்றின் மூலம் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ (Viksit Bharat through Digital Governance and Aspirational Block development) என்பதை அடைவதில் குடிமைப் பணியாளர்களின் பங்கை வலியுறுத்துகிறது.

சிறந்த நிர்வாக சேவை புரியும் அதிகாரிகளுக்கு இந்த நாளில் பிரதமரின் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவது வழக்கமாகும்.