X

இன்று உலக சுற்றுச்சூழல் தினம்!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பூமிப்பந்தின் நிலைத்தன்மை குறித்த விழிப்புணர்வை உலக மக்களிடையே கொண்டு சேர்ப்பதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.

இயற்கையைச் சுரண்டாமல் அதோடு இணைந்து வாழ்வதன் அவசியத்தை உணர்த்தும் இந்த நாளில், நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான உலக சுற்றுச்சூழல் தினத்தின் மையக்கருத்தாக (Theme) “இயற்கையால் ஈர்க்கப்பட்டு, காலநிலைக்காக, நமது எதிர்காலத்திற்காக” (Inspired by Nature. For Climate. For Our Future.) என்பது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பெருகி வரும் புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றங்கள் மனித குலத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள இந்தச் சூழலில், நாம் வாழும் இந்த பூமியையும் அதன் வளங்களையும் எதிர்காலத் தலைமுறையினருக்குப் பத்திரமாக ஒப்படைக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை . அதனால், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது, மரக்கன்றுகளை நடுவது மற்றும் இயற்கை வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது போன்ற எளிய பழக்கங்களை இன்றிலிருந்தே நம் வாழ்வில் உறுதிமொழியாக ஏற்போம்.