X

கிரீன்லாந்து தொடர்பாக ஐரோபிய நாடுகளை மிரட்டும் டிரம்ப்

ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. இதற்கிடையே தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இதுதொடர்பாக டென் மார்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் உடன்பாடு ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தார். இதற்கிடையே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த டென்மார்க், பிரிட்டன், பிரான்ஸ், பின்லாந்து ஜெர்மனி உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதலாக 10% வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

இந்நிலையில், கிரீன்லாந்தை ஒப்படைக்காவிட்டால், ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதிக்கும் என்றும், இதில் 100% உறுதியாக உள்ளதாகவும் டிரம்ப் மீண்டும் மிரட்டல் வைத்துள்ளார்.

ராணுவ படையெடுப்பு மூலம் கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுமா என்ற கேள்விக்கு, No Comments என டிரம்ப் பதில் அளித்தார்.