கருவுறுதல் சிகிச்சையில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் வகையில், சென்னையின் முன்னணி கருவுறுதல் சிகிச்சை மையங்களில் ஒன்றான பிரசாந்த் பெர்ட்டிலிட்டி மருத்துவமனை, ‘பிரசாந்த் பெர்ட்டிலிட்டி அட் ஹோம்’ என்ற புதிய சேவையை இன்று அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் நோயாளிகளுக்கு அவர்களின் வீடுகளிலேயே அவர்களுக்கு தேவையான ஐவிஎப்ஆதரவு சேவைகளை வழங்க உள்ளது.
சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், சிறப்புவிருந்தினர்நடிகைகுஷ்புசுந்தர்முன்னிலையில்இந்தச்சேவைதொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர். கீதா ஹரிப்ரியா மற்றும் இயக்குனர் டாக்டர். சம்ஹிதா மோடூரி ஆகியோர் பங்கேற்றனர். ஐவிஎப்சிகிச்சையை எவ்விதத் தடங்கலுமின்றித் தொடர்வதில் உள்ள முக்கிய சவால்களைத் தீர்ப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.வேலைக்குச்செல்லும்தம்பதிகள் தங்களின் ஐவிஎப்சிகிச்சை பயணத்தில், மருத்துவமனைக்குச் செல்ல முடியாததாலோ அல்லது குறித்த நேரத்தில் ஊசி போட முடியாததாலோ சிகிச்சை தடைபடுவதை எதிர்கொள்கின்றனர். இதனால் சிகிச்சையை மீண்டும் புதிதாகத் தொடங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனைத் தவிர்த்து, நோயாளிகள் தங்கள் மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே வசதியாகச் சிகிச்சையைத் தொடர இந்த ‘பிரசாந்த் பெர்ட்டிலிட்டி அட் ஹோம்’ சேவை உதவும்.
குழந்தை இன்மை: ஒரு முக்கிய சவால்: இந்தியாவில் குழந்தையின்மை என்பது ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. கணிசமான அளவிலான தம்பதிகள் இதனால் பாதிக்கப்படுவதாக இந்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. உலகளாவிய புள்ளிவிவரங்களின்படி, ஆறு பேரில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் குழந்தையின்மைப் பிரச்சனையை எதிர்கொள்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியான சவால்களைத் தாண்டி, குழந்தையின்மை தம்பதிகள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான உணர்வுபூர்வமான, சமூக மற்றும் நிதி சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஏனெனில், கருவுறுதல் சிகிச்சைக்கு நீண்ட காலம் மருத்துவர் ஆலோசனைகள், பரிசோதனைகள், மருந்துகள் மற்றும் தொடர் கண்காணிப்பு ஆகியவை தேவைப்படுகின்றன.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சிறப்பு மருத்துவக் குழு மற்றும் சென்னை முழுவதும் பயணிக்கக்கூடிய பிரத்யேக வாகனத்தையும் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், தம்பதிகள் தங்கள் சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதில்லை. ஊசி போடுதல், மருத்துவக் கண்காணிப்பு மற்றும் தொடர் பரிசோதனைகள் போன்ற சேவைகளை அவர்கள் வீட்டிலேயே எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம்.
நோயாளிகள் தங்கள் வீட்டில் பெறும் சேவைகளை எளிதாக முன்பதிவு செய்து நிர்வகிக்க, ‘பிரசாந்த் பெர்ட்டிலிட்டி’ என்ற பிரத்யேக மொபைல் செயலியையும் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலி மூலம், நோயாளிகள் தங்கள் சிகிச்சைக்குத் தேவையான சேவைகளை முன்பதிவு செய்யலாம். அதன் பிறகு, மருத்துவக் குழுவினர் சென்னை முழுவதும் நோயாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று சேவைகளை வழங்குவார்கள்.
தொழில்நுட்பம் மற்றும் தனிப்பட்ட கவனிப்பு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் இந்த முயற்சியின் மூலம், நோயாளிகள் தங்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வீடுகளிலேயே சிறந்த சேவைகளைப் பெற முடியும். இந்தச் செயலியும், சிறப்பு மருத்துவக் குழுவும் இணைந்து, தம்பதிகளின் ஐவிஎப்சிகிச்சை பயணத்தை மிகவும் எளிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும் மாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
இது குறித்துப் பேசிய பிரசாந்த் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர். கீதா ஹரிப்ரியா கூறுகையில்,”கருவுறுதல் சிகிச்சையில் நாங்கள் எங்கள் பயணத்தை முதன்முதலில் தொடங்கியபோது, எங்கள் நோக்கம் எளிமையானதாக இருந்தது – பல தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெரும் மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்ய வேண்டும் என்பதே அது. கடந்த பல ஆண்டுகளில், கருவுறுதல் சிகிச்சையில் மிகப்பெரிய மாற்றங்கள் வந்துள்ளன. ஆனால், நோயாளிகளுக்கு இந்தச் சிகிச்சைப் பயணத்தின் ஒவ்வொரு படியையும் எளிதாக்க வேண்டும் என்ற ஒரு விஷயம் மட்டும் மாறவே இல்லை.
‘பிரசாந்த் பெர்ட்டிலிட்டி அட் ஹோம்’ மூலம், மருத்துவமனையின் சுவர்களைத் தாண்டி, நோயாளிகள் இருக்கும் இடத்திற்கே கருவுறுதல் சிகிச்சையைக் கொண்டு செல்கிறோம். இது வெறும் வசதிக்காக மட்டுமல்ல; இது சிகிச்சையின் தொடர்ச்சி, நம்பிக்கை மற்றும் அன்பான கவனிப்பு பற்றியது. எதிர்காலத்தில் கருவுறுதல் சிகிச்சை என்பது நோயாளிகளுக்கு எளிதில் கிடைக்கக்கூடியதாகவும், அவர்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் மாற வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். அந்த இலக்கை நோக்கிய ஒரு முக்கியமான படியாகவே இந்த முயற்சி அமைந்துள்ளது” என்றார்.
இது குறித்து பிரசாந்த் மருத்துவமனைகள் குழுமத்தின் இயக்குனர் டாக்டர். சம்ஹிதா மோடூரி கூறுகையில்,“கருவுறுதல் சிகிச்சை என்பது ஒரு பயணம்; இதில் சிகிச்சையை எவ்வித இடையூறுமின்றித் தொடர்ந்து எடுத்துக்கொள்வது நல்ல பலனைத் தரும். இந்தச் சிகிச்சையின் போது பலமுறை மருத்துவமனைக்கு வருதல், சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல், தொடர் பரிசோதனைகள் ஆகியவை தேவைப்படும். வேலை, குடும்பம் மற்றும் பிற பொறுப்புகளைச் சமாளிக்கும் தம்பதிகளுக்கு, பலமுறை கருவுறுதல் மையத்திற்குப் பயணம் செய்வது ஒரு கூடுதல் சவாலாக மாறலாம்.
குழந்தையின்மைப் பிரச்சனை பல தம்பதிகளைப் பாதித்துள்ள நிலையில், சிகிச்சையை எளிதாகக் கிடைக்கச் செய்வதன் மூலமும், தேவையற்ற தடைகளைக் குறைப்பதன் மூலமும் அதிக அளவிலான நோயாளிகள் பயனடைவார்கள் என நாங்கள் நம்புகிறோம். மருத்துவர்களின் கண்காணிப்பில் நோயாளிகளுக்குத் தேவையான கவனிப்பை அவர்களின் இடத்திற்கே கொண்டு செல்லும் நோக்கத்தோடுதான் ‘பிரசாந்த் பெர்ட்டிலிட்டி அட் ஹோம்’ சேவை உருவாக்கப்பட்டுள்ளது.முடிவாக, கருவுறுதல் சிகிச்சையில் உள்ள சில நடைமுறைச் சிக்கல்களை நீக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இதன் மூலம், நோயாளிகள் தங்களின் மிக முக்கியமான இலக்கான குழந்தை பாக்கியத்தை அடைவதில் மட்டுமே முழுமையாகக் கவனம் செலுத்த முடியும்” என்றார்.
இந்த அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகை குஷ்பு சுந்தர் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கையில்:”குழந்தை பாக்கியம் பெறுவதற்கான பயணம் என்பது மிகவும் தனிப்பட்ட ஒரு விஷயம். கருவுறுதல்சிகிச்சை பெறும் தம்பதிகளுக்கு, இது உணர்வுபூர்வமாகவும் உடல் ரீதியாகவும் அதிக சவாலான ஒரு அனுபவமாக இருக்கலாம். அவர்களுக்கு அன்பான கவனிப்பும், நம்பிக்கையும், ஆதரவும் அதிகம் தேவைப்படும் இந்த நேரத்தில், அவர்களின் பயணத்தை எளிமையாகவும் எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுவது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப மருத்துவச் சேவைகள் மாற வேண்டும் என்பதை உணர்ந்து, தம்பதிகளுக்குத் தேவையான சிகிச்சையை அவர்களின் இடத்திற்கே கொண்டு சேர்க்கும் ‘பிரசாந்த் பெர்ட்டிலிட்டி அட் ஹோம்’ திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதுபோன்ற முயற்சிகள் சிகிச்சையை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல், தங்கள் வாழ்வின் மிக முக்கியமான பயணத்தை மேற்கொள்ளும் தம்பதிகளுக்கு அதிக நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று கூறினார்.
செயலி மற்றும் உதவி எண்
‘பிரசாந்த் பெர்ட்டிலிட்டி’ மொபைல் செயலி மூலம், நோயாளிகள் மருத்துவர்களைச் சந்திப்பதற்கான முன்பதிவுகளை எளிதாகச் செய்யலாம். மேலும், தொடர் பரிசோதனைகளை நிர்வகிக்கவும், தங்கள் மருத்துவப் பதிவுகள் மற்றும் சிகிச்சை தொடர்பான கோப்புகளைப் பராமரிக்கவும், தங்கள் சிகிச்சைப் பயணத்துடன் தொடர்ந்து இணைந்திருக்கவும் இந்த ஒரே செயலி உதவுகிறது.
‘பிரசாந்த் பெர்ட்டிலிட்டி அட் ஹோம்’ மூலம் கிடைக்கும் சேவைகள், அதற்கான தகுதிகள் மற்றும் முன்பதிவு குறித்த கூடுதல் தகவல்களைப் பெற, நோயாளிகள் 044 2888 2888 என்ற 24 மணிநேரமும் செயல்படும் உதவி மைய எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.தம்பதிகளின் சிகிச்சைப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தரமான கருவுறுதல் சிகிச்சையை எளிதாகவும் வசதியாகவும் கிடைக்கச் செய்யும் நோக்கில், இந்தச் சேவை தற்போது சென்னை முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.