செயற்கை நுண்ணறிவில் முன்னணி வகிக்கும் ஆந்த்ரோபிக்கின் கிளாட் பேபிள் 5, மித்தோஸ் 5 ஆகிய மேம்பட்ட ஏஐ மாடல்கள் பயன்பாட்டுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், உலகெங்கிலும் உள்ள பயனர்கள் யாரும் அவற்றை பயன்படுத்தக் கூடாது என அமெரிக்க வர்த்தகத் துறை உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக பேபிள் 5 மாடலானது எந்தவொரு கணினி பாதுகாப்பு கட்டமைப்புகளையும் உடைக்கும் அசாதாரணத் திறன் கொண்டது என அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகின்றனர். இதன் மூலம் சைபர் தாக்குதல்களை நடத்த கடத்தல்காரர்களோ அல்லது எதிரி நாடுகளோ நடத்தலாம் என கவலை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசின் இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆந்த்ரோபிக் நிறுவனம், “எங்கள் மாடலில் உள்ள மிகச் சிறிய, கட்டுப்படுத்தக்கூடிய குறைபாட்டை காரணம் காட்டி உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக சேவையை முடக்குவது முறையான நடவடிக்கை அல்ல. சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய ஏற்கனவே பல கடுமையான கட்டுப்பாடுகளை நாங்கள் விதித்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளது.