X

மத்திய கிழக்கில் 4500 கூடுதல் வீரர்களை அனுப்பிய அமெரிக்கா!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா சுமார் 4,500 கூடுதல் வீரர்களை அப்பகுதிக்கு அவசரமாக அனுப்பியுள்ளது. இதில் ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் மற்றும் கவச வாகனங்களின் ஆதரவுடன் செயல்படும் தரைப்படை தரையிறங்கும் குழுவும் (Infantry Landing Team) அடங்கும்.

ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைகளில் மோதல் தீவிரமடைந்து வரும் சூழலில், தனது நட்பு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய நிலைத்தன்மையை உறுதி செய்யவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள இந்த ராணுவக் குவிப்பு, மத்திய கிழக்கில் ஒரு பெரிய அளவிலான போருக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.