X

பிஃடே உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது வேலம்மாள் பள்ளி

பிஃடே உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025 போட்டி அமெரிக்காவின்‌ வாஷிங்டன் நகரில் ஆகஸ்ட் 02 முதல்‌ 07வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவதற்காக இந்தியாவிலிருந்து முதன் முறையாக தமிழ்நாட்டின் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி‌ வீரர்கள் அமெரிக்கா சென்றனர்..

இப்பள்ளியின்‌ சார்பாக பள்ளியின் பயிற்சியாளர்‌- அணித்தலைவர் எஸ்.வேலவன்‌ தலைமையில் வீரர்கள் கீர்த்தி‌ ஶ்ரீ ரெட்டி (WFM), அஸ்வத்.எஸ் (IM), தக்ஷின்அருண் (FM), இளம்பரிதி (IM) எ.ஆர், பிரனவ் கே.பி (FM) பங்கேற்றார்கள்.

மொத்தம் 8 சுற்று. தொடர்ச்சியாக 8 சுற்றின் முறையே மங்கோலியா, ஹங்கேரி, ஆஸ்திரியா, அமெரிக்க, கஜகிஸ்தான், இலங்கை, உஸ்பெகிஸ்தான் நாட்டு‌ப் பள்ளியை‌ எதிர்கொண்டு 8 சுற்றிலும் தோல்வியடையாமல் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்கள்.

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள எபிஸ்கோபல் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 250-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து 55 நாட்டின்‌ சிறந்த பள்ளிகள் அணி கலந்து கொண்டது.

வீரர்கள் ஐவரும் மற்றும் அணித்தலைவர் த எஸ்.வேலாயுதம் நாட்டிற்கும் மாநிலத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.