X

நொய்டாவில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் வன்முறை!

இந்தியாவின் தொழில்மையமான நொய்டாவில், ஊதிய உயர்வு மற்றும் நிலையான வேலை நேரத்தை வலியுறுத்தி தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டத்தின் போது ஆவேசமடைந்த தொழிலாளர்கள் அங்கிருந்த வாகனங்களுக்குத் தீ வைத்ததோடு, போலீசாரை நோக்கி சரமாரியாகக் கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தடியடி நடத்தியதால் இருதரப்பிற்கும் இடையே கடும் மோதல் உருவானது.

தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகத் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம், வன்முறையில் முடிந்ததால் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags: Noidaprotest