X

ஸ்ரீ லட்சுமி நரசிம்மா சுவாமி கோவிலில் தரிசனம் செய்த விராட் கோலி

டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாடி வருகிறார். 2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை விராட் கோலி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் அடித்த விராட் தொடர் நாயகன் விருது வென்று தன மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

3 ஆவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்த நிலையில், அந்த ஊரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் விராட் கோலி சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோ இணையத்தில் வைரலாகி வைரலாக பரவி வருகிறது.