X

இந்த தேர்தலில் டாக்டர் ராமதாசின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் – ஜி.கே.மணி பேட்டி

பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி தைலாபுரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு தேர்தலில் வெற்றி என்பது கட்சியின் பலம். அந்த கட்சியை வழிநடத்தக் கூடிய தலைவருக்கான மிகப்பெரிய சக்தி, அதையும் தாண்டி கூட்டணி. அதற்கும் மேல் அந்த தொகுதியில் வேட்பாளர்களுக்குரிய முக்கியத்துவம். இதெல்லாம் சேர்ந்ததுதான் வெற்றி. அந்த அடிப்படையில் இதையெல்லாம் கூட்டி கழித்து நேர்காணல் நடத்தி டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஒரு நல்ல முடிவு எடுப்போம்.

பா.ம.க. இன்று ஒரு நெருக்கடியான சூழலை சந்தித்தால் கூட டாக்டர் ராமதாஸ் பின்னால் கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்கள், பா.ம.க.வின் அனுதாபிகள், மூத்த நிர்வாகிகள் ஆகியோர் உள்ளனர். அவர்கள் இந்த தேர்தலில் டாக்டர் ராமதாசின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

டாக்டர் ராமதாசை பாதுகாக்க வேண்டும் என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த தேர்தல் டாக்டர் ராமதாசுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.