X

விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி – சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் ஒண்ட ஜானிக் சின்னர்

டென்னிஸ் உலகின் முதன்மை வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் (Jannik Sinner), விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

லண்டன் சென்டர் கோர்ட்டில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவை 6-7, 7-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சின்னர் மகுடம் சூடினார். இந்த அசாத்திய வெற்றியின் மூலம், ஓபன் எரா (Open Era) வரலாற்றில் விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்ட 10-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இது சின்னர் வெல்லும் 5-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். ஆரம்பத்தில் முதல் செட்டை இழந்தாலும், மன உறுதியோடு போராடி அடுத்தடுத்த செட்களைக் கைப்பற்றி சின்னர் அசத்தினார். இந்தத் தொடர் வெற்றிகளின் மூலம் டென்னிஸ் உலகின் அசைக்க முடியாத சக்தியாக அவர் உருவெடுத்துள்ளார்.