X

உலக கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பிரதமர் மோடியை சந்தித்தனர்

இந்தியாவில் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது. ஆண்கள் அணி இதற்கு முன்னதாக இரண்டு முறை (கபில்தேவ் தலைமையில் 1983, டோனி தலைமையில் 2011) 50 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது.

உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகள், அணி நிர்வாகிகள் இன்று பிரதமர் மோடியை, அவரது லோக் கல்யாண் மார்க் வீட்டில் சந்தித்தனர். அப்போது வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது பிரதமர் மோடியிடம் உலககோப்பையை வழங்கி போட்டோ எடுத்துக் கொண்டனர்.

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 3 போட்டிகளில் தொடர் தோல்வியடைந்து, பின்னர் கம்பேக் கொடுத்ததை பாராட்டியுள்ளார். இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், 2017-ல் பிரதமரை சாம்பியன் கோப்பை இல்லாமல் சந்தித்தோம். தற்போது சாம்பியன் கோப்பையுடன் சந்தித்தோம். பிரதமர் மோடியை அடிக்கடி சந்திக்க விரும்புகிறோம் என்றார்.