Tamil
மோடி-விஜயகாந்த் இடையிலான நட்பு அன்பினால் கட்டமைக்கப்பட்டது – பிரேமலதா விஜயகாந்த்
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த தே.மு.தி.க. தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்று கடந்த வாரம் பிரேமலதா கூறி இருந்தார். இதற்கிடையே சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணிக்குள் தே.மு.தி.க.வையும் கொண்டுவர முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடியை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா புகழ்ந்துள்ளார். கூட்டணி தொடர்பான யூகங்கள் எழுந்து வரும் நிலையில் மோடியை புகழ்ந்து அளித்த பேட்டியை பிரேமலதா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளம் ஒன்றுக்கு அ� Read More
மியான்மரில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப் படை விமானம் மீது சைபர் தாக்குதல்!
அண்டை நாடான மியான்மரில் கடந்த மாதம் 29-ந்தேதி சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் இடிந்து… Read More
புரட்சியாளர் அம்பேத்கரை உயர்த்தி பிடித்துக் கொண்டாடும் இயக்கம் தான் திராவிட இயக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1000 பழங்குடியினர் குடியிருப்புகளை திறந்து வைத்து 49,542 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள். இந்த சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை தீண்டாமை குற்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக முழங்கி வரலாற்றை மாற்றிய புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள். அதனால்தான் திராவிட மாடல் ஆட்சியிலே தந்தை பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாகவும், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் அறிவித்தோம். இன்று காலையில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளோம். சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் வேகமாக நகர வேண்டும். இந்த மண்ணில் இருக்கிற ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் மாற்றத்திற்கான சிந்தனை வலுப்பெற வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளோம். புரட்சியாளர் அம்பேத்கரை உயர்த்தி பிடித்துக் கொண்டாடும் இயக்கம் தான் திராவிட இயக்கம். அவர் எழுதிய சாதிய ஒழிக்க வழி என்ற நூலை 1930-ம் ஆண்டே தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார். புரட்சியாளர் அம்பேத்கர் நமக்கான அடையாளம் என்று தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கிறோம். சமூக நீதி, சமத்துவம், தலித் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் புரட்சியாளர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் மக்களவையில் 2 முறையும், மாநிலங்களவையில் ஒரு முறையும் பங்கெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்தவர். அவர் இன்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றியதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் சைதாப்பேட்டையில் எம்.சி.ராஜா மாணவர் விடுதியை திறந்து வைத்துவிட்டு வந்துள்ளேன். இந்த மேடையில் சகோதரர் திருமாவளவன் மகிழ்ச்சியோடு அமர்ந்துள்ளார். காரணம் அவரும் அந்த விடுதியில் தங்கி படித்தவர்தான். இத்தகைய பெருமைக்குரிய விடுதியை திறந்து வைக்கிற நாளில் அந்த விடுதியின் முன்புறம் பெருந்தலைவர் எம்.சி.ராஜாவின் மார்பளவு சிலை மிக விரைவில் வைக்கப்படும் என்பதை பெருமையோடு அறிவிக்கிறேன். திராவிட மாடல் ஆட்சியில் இன்றைக்கு எண்ணிலடங்கா சாதனைகளை செய்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் சென்னையில் உள்ள பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த மாணவர்களுக்கு இந்த எம்.சி.ராஜா விடுதி பேருதவியாக இருக்கும். எனவே சமூக நீதியை நிலை நாட்டுகிற அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான நலத்திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் சமூக நீதி மற்றும் சமத்துவ சிந்தனை குறித்து 6,977 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் திருவள்ளுவர் நாள் அன்று டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் 174 மாணவர்கள் இங்கு வந்துள்ளனர். இவர்கள் வந்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஏனென்றால் இது திராவிட மாடல் அரசின் சாதனை. மாணவர்களின் கல்விக்காக பல திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமல்ல, அதிக எண்ணிக்கையில் விடுதிகளையும் கட்டி இருக்கிறோம். மாணவர்களின் முன்னேற்றம் என்பது கண்கள் மாதிரி என்றால், பெண்களின் முன்னேற்றம் என்பது இதயத்துடிப்பு மாதிரி. அதைத்தான் புரட்சியாளர் அம்பேத்கர் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அந்த சமூகத்தின் பெண்கள் முன்னேற்றத்தை வைத்து அளவிடுகிறேன் என்று சொன்னார். அதனால்தான் பெரிதும் விவசாய தொழிலாளர்களாக இருக்கிற ஆதிதிராவிட மகளிரை நில உடமையாளராக மாற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு 'நன்னி லம்' என்ற மகளிருக்கான நிலம் வாங்கும் திட்டத்தை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். அண்ணல் அம்பேத்கரின் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 3,950 தொழில்முனைவோருக்கு ரூ.630 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.250 கோடி வீதம் 4 ஆண்டுகளில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் தொல் குடி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று நான் உறுதியோடு சொல்லிக் கொள்ள விரும்புவது ஆதிதிராவிட மக்களின் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு எப்போதும் துணை நிற்கும். சாதியின் பெயரால் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது, தெருவில் நடக்கக் கூடாது, கோவிலுக்குள் நுழையக் கூடாது என்பதை எல்லாம் நம்முடைய கொள்கைகளால் போராட்டங்களால் இடைவிடாத பரப்புரைகளால் உடைத்து நொறுக்கி விட்டோம். கல்வியும், படிப்பும், வேலையும், பதவியும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கையில் அதிகாரம் செலுத்தும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்தி இருக்க கூடிய மாற்றம். சாதிதான் பிளவுபடுத்தும் முதலாவது சக்தி. அந்த ஆயிரம் ஆண்டு அழுக்கை ஒழிக்கத்தான் நாம் பாடுபட்டு கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் தமிழர்கள் என்று உணர வைப்பதற்கு தான் இன்று பாடுபடுகிறோம். இந்த ஆட்சிதான் பொற்காலம். நமது பாதையும், பயணமும் மிக நீண்டது. என்னைப் பொறுத்தவரைக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவச் சமுதாயம் அமைய வேண்டும். வெறுப்பு அரசியலை விட, அன்பை விதைக்க கூடிய அரசியல்தான் வலுவானது. ஆற்றல் வாய்ந்தது என்று நான் நம்புகிறேன். தமிழ், தமிழர் என்ற ஒன்றுதான் நம்மை ஒன்றிணைக்கும். சமூக நீதி, பொதுவுடமை சமத்துவம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க புரட்சியாளர் பிறந்தநாளில் மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம். ஜெய்பீம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசும்போது இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் வகையில் தமிழ்நாட்டை உயர்த்தி இருக்கிறார். இந்தியாவில் அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடும் முதல் மாநிலம் தமிழ்நாடு என்று கூறினார். Read More
வெயிலின் தாக்கத்தை குறைக்க மாட்டு சாணத்தை வகுப்பறையில் பூசிய கல்லூரி முதல்வர்!
டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர் வெயிலின் தாக்கத்தை தணிக்க வகுப்பறையில் பசுவின் சாணம் கொண்டு பூசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கல்லூரி முதல்வர் பிரத்யுஷ் வத்சலா, ஊழியர்களுடன் வகுப்பறை சுவரில் மாட்டுச் சாணத்தை பூசுவது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த வீடியோவை கல்லூரியின் ஆசிரியர்கள் குழுவில் பகிர்ந்த வத்சலா சி பிளாக்கில் வகுப்பறைகளை குளிர்விக்கும் ஆராய்ச்சியின் ஒரு பகுதி இந்த முயற்சி என்று குறிப்பிட்டார். ஆனால் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் எதிர்மறை கருத்துக்களை குவித்து வருகிறது. வெயிலை தணிக்கும் முயற்சியாக அவர் மாட்டு சாணத்தை பயன்படுத்துவது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே இதுகுறித்து பேசிய வத்சலா, "இது சுற்றுச்சூழல் ஆய்வுகள் துறையால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியின் ஒரு பகுதி. இது வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சி. ஆறு அறைகளில் இந்த பரிசோதனையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இது வெறும் மாட்டு சாணம் அல்ல. மாட்டு சாணம், மண், சிவப்பு மணல், ஜிப்சம் பவுடர் மற்றும் முல்தானி மண் ஆகியவற்றைக் கலந்து இந்த பேஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனுடன், அறையின் வெப்பநிலையை அளவிடுவதற்கான உபகரணங்களும் அங்கு நிறுவப்பட்டுள்ளன. எனவே இதுதொடர்பாக வதந்தி பரப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். Read More
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பொது மக்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு
பிரதமர் மோடி இன்று அரியானா மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். குறிப்பாக மின்சார உற்பத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:- * விக்ஷித் பாரத்திற்கான தீர்வு விக்ஷித் அரியானா ஆகும். டபுள் என்ஜின் அரசால் அரியானா தற்போது டபுள் வேகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது. * காங்கிரஸ் ஆட்சியில் மின்தடை இருந்து வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் மின் உற்பத்தி இரண்டு மடங்காகியுள்ளது. இந்தியா மின்சாரத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. * கர்நாடகா மாநிலத்தில் மின்சாரம் முதல் பால் வரை எல்லாவற்றின் விலையும் காங்கிரஸ் தலைமையிலான அரசு கீழ் உயர்த்தப்பட்டுள்ளது. * காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பொது மக்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது. இமாச்ச பிரதேசத்தில் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் முடங்கியுள்ளதால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். Read More
தமிழகத்தில் 18 ஆம் தேதி வரை வெப்பம் அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வரும் 18ம் தேதி வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் அதிகட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. குறிப்பாக, வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்சமாக 104 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் மேலும் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், இந்தியாவில் பல மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் வெப்ப அலையும் வீசுகிறது. நேற்று அதிகபட்சமாக ராஜஸ்தானில் 111 டிகிரி வெயில் அடித்தது. இந்த நிலையில் டெல்லி மற்றும் வடமாநிலங்களில் வருகிற 18-ந்தேதி வரை வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. Read More
பா.ஜ.க. இருக்கும் கூட்டணியை தமிழக மக்கள் விரட்டி அடிப்பார்கள் – காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் காங்கிரசார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும் மறைந்த முன்னாள் எம்.பி வசந்தகுமாரின் பிறந்தநாளையொட்டி அவரது படத்துக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:- அம்பேத்கர் நாட்டு மக்களுக்கு உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு பா.ஜ.க. ஆட்சியில் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. சட்டத்தை பாதுகாக்கவும் கோர்ட்டுகளுக்கு செல்ல வேண்டிய அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டு ஆர்.எஸ்.எஸ். சட்டத்தை நிலைநாட்ட மோடி அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் எந்தெந்த கட்சிகளை சேர்த்து எந்த மாதிரியான கூட்டணி அமைத்து வந்தாலும் பா.ஜ.க. இருக்கும் கூட்டணியை தமிழக மக்கள் விரட்டி அடிப்பார்கள். ஒரு போதும் பாசிச பா.ஜ.க.வால் தமிழகத்தில் காலூன்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அசன் மவுலானா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கோபண்ணா, கே.விஜயன், இதயத்துல்லா, தி.நகர் ஸ்ரீராம், மாவட்ட தலைவர் முத்தழகன், எம்.வி.ராமசாமி, எஸ்.கே.முகமது அலி, தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். Read More
முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 52 கோடி மக்களுக்கு ரூ.33 லட்சம் கோடி கடன் – மத்திய அமைச்சர் தகவல்
முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் 52 கோடி மக்களுக்கு தொழில் தொடங்குவதற்காக பிணையில்லாமல் 33 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதில் பயனடைந்தவர்களில் 68 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள் எனத் தெரிவித்துள்ளார். மேலும், "இந்த கடன் 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இன்று, இந்த உதவி மூலம் மக்கள் புதிய வியாபார முயற்சிகளை தொடங்குகின்றனர். அத்துட்ன நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு கட்டமைப்புகளுக்கான பட்ஜெட்டை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இது நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன" என்றார். Read More
மூன்று நாட்களில் அரசு பேருந்துகளில் 4 லட்சம் பேர் பயணம்!
சென்னையில் வார விடுமுறை, பவுர்ணமி கிரிவலம், தமிழ் புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை வழக்கமாக இயக்கப்படும் அரசு பஸ்களுடன் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. கடந்த 11-ந்தேதி முதல் நேற்று வரை வழக்கமாக இயக்கப்படும் அரசு பஸ்களுடன் கூடுதலாக சுமார் 1,900 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த 3 நாட்களிலும் அரசு பஸ்களில் மொத்தம் 4 லட்சம் பேர் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு விழாவையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து 877 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் மூலம் 52 ஆயிரம் பயணிகள் திருவண்ணாமலைக்கு பயணம் மேற்கொண்டனர். எனவே கடந்த 3 நாட்களிலும் அரசு பஸ்கள் மூலம் மொத்தம் 4.50 லட்சம் பயணிகள் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் தொடர்விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் இன்று சென்னைக்கு புறப்படுகிறார்கள். ஒரே நாளில் பொதுமக்கள் அனைவரும் மொத்தமாக புறப்படுவதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரெயில்கள் மற்றும் அரசு பஸ்கள் நிரம்பி வழிந்தன. இதனால் பொதுமக்கள் பலர் சென்னைக்கு திரும்ப ஆம்னி பஸ்களையே நாடியுள்ளனர். இதனால் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:- தொடர் விடுமுறை என்பதால் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக மதுரையில் இருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நெல்லையில் இருந்து சென்னைக்கு குறைந்தபட்சமாக ரூ.1,900 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி 4 பேர் கொண்ட குடும்பம் செல்ல ரூ.8 ஆயிரம் செலவழிக்க வேண்டி உள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறுகையில், 'ஆம்னி பஸ்களுக்கு கட்டண நிர்ணயம் என்பது இல்லை. உரிமையாளர்களே கட்டணத்தை நிர்ணயித்து அதற்குள்ளாகவே பஸ்களை இயக்கி வருகிறோம். கட்டண விவரத்தை இணையதளங்களில் வெளியிட்டு உள்ளோம். நாங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்துக்கு அதிகமாக வசூலித்தால் நாங்களே புகார் செய்து நடவடிக்கை எடுக்கிறோம்' என்றனர். இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'ஆம்னி பஸ்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதிக கட்டணம் வசூலித்தால் பயணிகள் புகார் செய்யும் பட்சத்தில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் விடப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். Read More
நெருப்புடன் விளையாடினால், அது உங்களையும் எரித்துவிடும் – முகமது யூனுஸுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை
வங்கதேசத்தில் கடந்த வருடம் வெடித்த மாணவர் போராட்டத்தின் பின் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பால் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதன்பின் அந்நாட்டில் முகமது யூனுஸ் தலைமயிலான இடைக்கால அரசு அமைந்தது. கடந்த ஆகஸ்ட் முதல் இந்தியாவில் உள்ள ஷேக் ஹசீவா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அதற்கான பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. முகமது யூனுஸ் அரசை ஷேக் ஹசீனா தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களிடம் வீடியோவில் உரையாற்றிய அவர், வங்கதேசத்தின் வரலாற்றை, குறிப்பாக நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் அவாமி லீக்கின் பங்களிப்புடன் தொடர்புடையவற்றை யூனுஸ் அழித்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். அவர் கூறியதாவது, "வங்காளதேச சுதந்திர இயக்கத்தின் அனைத்து அடையாளங்களும் அகற்றப்படுகின்றன. சுதந்திரப் போராளிகள் அவமதிக்கப்படுகிறார்கள். அவர்களின் நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க அனைத்து மாவட்டங்களிலும் நினைவகங்களை நாங்கள் கட்டினோம், ஆனால் அவை தற்போது எரிக்கப்படுகின்றன. யூனுஸால் இதை நியாயப்படுத்த முடியுமா?. நீங்கள் நெருப்புடன் விளையாடினால், அது உங்களையும் எரித்துவிடும். அதிக அளவு கடன் வாங்கும் அந்த நபர் (யூனுஸ்), அதிகார பசி, பண பசிக்காக, வெளிநாட்டு பணத்தை வைத்து நாட்டை அழிக்கிறார். வங்கதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கட்சியை சேர்ந்தவர்கள் அவாமி லீக் தலைவர்களை துன்புறுத்துகிறார்கள்" என்று தெரிவித்தார். Read More