X

Tamil

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – காஸ்பர் ரூட் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்

நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ்… Read More

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது.… Read More

ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் நடிக்கின்றனர். ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து ரஜினியின் 170- வது படத்தை… Read More

கவனம் ஈர்க்கும் ‘தண்டட்டி’ படத்தின் முதல் பாடல்

அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பசுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் 'தண்டட்டி'. இப்படத்தை சர்தார், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வித்யாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பசுபதியுடன் இணைந்து ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில்,     'தண்டட்டி'படத்தின் முதல் பாடலான 'தலையாட்டி பேசுறப்போ' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தண்டட்டியின்… Read More

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய உதயநிதி

'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாவீரன்'. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார்.  'மாவீரன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2… Read More

சமூக வலைதள பக்கங்களில் இருந்து நடிகை காஜோல் விலகல்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கஜோல். இவர் இந்தியில் பிரபல நடிகர்களாக வலம் வரும் ஷாருக்கான், சல்மான் கான் போன்ற டாப் நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.… Read More

கருணாநிதி உருவ வடிவில் அணிவகுத்து நின்ற தூற்மை பணியாளர்கள்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று காலை திரண்ட 2752 தூய்மை பணியாளர்கள் கருணாநிதி உருவ வடிவில் அணிவகுத்து நின்றனர். டிரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சியில் தத்ரூபமாக அமைந்திருந்த கருணாநிதியின் படம். Read More

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள பிபோர்ஜோய் புயல், அடுத்த 36 மணி நேரத்தில் மீண்டும் தீவிரம் அடைந்து வடகிழக்கு திசையிலும், அடுத்த 3 நாட்களில் வடமேற்கு திசையிலும் நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாகவும் கேரளாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மாநிலத்தில் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் பேரிடர் மீட்பு துறையினர் உஷார் நிலையில் இருக்கும்படி மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா உள்பட 8 மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. Read More

டுவிட்டரில் கிரியேட்டர்கள் பணம் சம்பாதிக்க புதிய வழி – எலான் மஸ்க் அறிவிப்பு

உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டர், விரைவில் கிரியேட்டர்களும் பணம் சம்பாதிக்க செய்யும் புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இதனை டுவிட்டரை விலைக்கு வாங்கியிருக்கும் எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறார். டுவிட்டர் தளத்தில் கிரியேட்டர்கள் பதிவிடும் டுவிட்களில் விளம்பரங்களை வழங்கி, அதில் இருந்து கிடைக்கும் வருவாயை கிரியேட்டர்களுக்கு பங்கிட்டு கொடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக முதற்கட்டமாக 5 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். "கிரியேட்டர் வெரிஃபைடு பெற்றிருக்க வேண்டும். மேலும் வெரிஃபைடு பயனர்களுக்கு மட்டுமே விளம்பரங்கள் வழங்கப்படும்," என்று எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக விலைக்கு வாங்கிய எலான் மஸ்க், அதில் ஏராளமான மாற்றங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். அதன்படி டுவிட்டர் தளத்தில் பயனர்களுக்கு வெரிஃபைடு அந்தஸ்தை வழங்கும் வகையில் புளூ சந்தா அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது கட்டணம் செலுத்துவோருக்கு வெரிஃபைடு அந்தஸ்த்து, கூடுதலாக புதிய வசதிகளை விரைந்து வழங்கி வருகிறது. Read More

அம்மாவுக்காக தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லம் கட்டிய மகன்!

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் . இவரது மனைவி ஜெய்லானி பீவி. இவர்களுக்கு 4 மகள்,  1 மகன் உள்ளனர். இவர் சென்னையில்… Read More