Tamil
தேனிலவுக்காக இந்தோனேஷியா சென்ற மருத்துவ தம்பதி கடலில் மூழ்கி மரணம்
சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர் குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் மருத்துவர் விபூஷ்னியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரனுக்கும் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி அன்று வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு இருவரும் இந்தோனேசியாவிற்கு தேனிலவு சென்றனர். இந்நிலையில், இந்தோனேஷியாவில் பாலி தீவில் உள்ள கடலில் இருவரும் மோட்டார் போட்டில் சென்றபோது போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருவரும் திடீரென படகில் இருந்து விழுந்து நீரில் மூழ்கினர். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் தம்பதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், லோகேஸ்வரன் சடலமாக மட்டுமே கிடைத்துள்ளார். விபூஷ்னியாவின் உடலை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இந்திய, தமிழக அரசு மற்றும் அவர்களது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருவரின் சடலங்களை இந்தியாவிற்கு எடுத்து வருவது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருமணமான 10 நாளில் மருத்துவ தம்பதி உயிரிழந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
ரேவ் பார்ட்டியின் ரகசியங்களை சொல்லும் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘ரேவ் பார்ட்டி’! – ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது
போனகானி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ராஜு போனகானி தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘ரேவ் பார்ட்டி’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, பின்னணி வேலைகள் தொடங்கியுள்ள… Read More
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – ரூனேவை வீழ்த்தி ருட் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்
நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ்… Read More
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – ஸ்வியாடெக், முச்சோவா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான பெல்லாரசின் அரினா சபலெங்கா 6-4, 6-4 என்ற நேர்… Read More
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ் – 2வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 151/5
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் 163 ரன்னில் அவுட்டானார். ஸ்டீவன் ஸ்மித் 121 ரன்னில் போல்டானார். அலெக்ஸ் கேரி 48 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஷமி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஆரம்பம் முதல் சீரான இடைவெளியில் இந்தியாவின் விக்கெட்டுகள் வீழ்ந்தன. ரோகித் சர்மா 15 ரன்னும், சுப்மான் கில் 13 ரன்னும், புஜாரா- விராட் கோலி தலா 14 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 71 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அடுத்து இறங்கிய ஜடேஜா, ரகானேவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்தியா 31 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 121 ரன்களை எடுத்தது.… Read More
விசாரணைக்கு ஆஜராக நடிகை டிம்பிள் ஹயாதிக்கு நீதிமன்றம் உத்தரவு
பிரபல நடிகையான டிம்பிள் ஹயாதி 'தேவி 2', 'வீரமே வாகை சூடும்', அட்ரங்கிரே, கில்லாடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஐதராபாத்தில் உள்ள ஜானர்லிஸ்ட் காலனி… Read More
தளபதி 68 படத்தின் டைடில் போஸ்டர் ஜூன் 22 ஆம் தேதி வெளியாகிறது
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68- வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன்… Read More
ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த நடிகை சமந்தா
தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவரி, நான் ஈ, கத்தி, தங்கமகன், தெறி, 24 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம்… Read More
பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்கு 10000 ஆதி புருஷ் பட டிக்கெட்களை வழங்க முடிவு செய்த நடிகர் ரன்பீர் கபூர் முடிவு
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி… Read More
வைரலாகும் யோகி பாபு படத்தின் டீசர்
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் தற்போது 'ட்ரிப்' படத்தை இயக்கிய இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் 'தூக்குதுரை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இனியா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மூன்று விதமான காலங்களில் நடைபெறும் நிகழ்வை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தை ஓபன் கேட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மனோஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த டீசரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். Read More