செய்திகள்
ஈரான் உதவியுடன் டிரோன் தொழிற்சாலை அமைக்கும் ரஷ்யா
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. முதலில் உக்ரைனை எளிதாக வீழ்த்திவிடலாம் என ரஷியா நினைத்தது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மிகப்பெரிய அளவில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கியதால் உக்ரைன் எதிர்த்து போரிட்டு வருகிறது. மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தவில்லை என்றாலும் தற்பாதுகாப்பை மிகப்பெரிய அளவில் செய்து வருகிறது. இதனால் ரஷியாவால் உக்ரைனின் பெரும்பகுதியை இன்னும் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் உள்ளது. தற்போது இரு பக்கத்தில் இருந்தம் டிரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நேற்றுகூட இரு நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள ரஷியப் பகுதியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இனிவரும் காலங்களில் டிரோன்கள், தாக்குதலுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது. இந்த நிலையில் ஈரான் உதவியுடன் ரஷியா டிரோன் தொழிற்சாலை கட்டிவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மாஸ்கோவின் கிழக்குப் பகுதியில் டிரோன் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உபகரணங்களை ஈரான் வழங்கி வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, உளவுத்துறை மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர், ரஷியாவின் அலபுகா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருந்து அடுத்த வருடம் இந்த தொழிற்சாலை இயக்கத்திற்கு வரும் என புலனாய்வுத்துறை அதிகாரிகள் நம்புவதாக தெரிவித்துள்ளார். மாஸ்கோவின் கிழக்குப் பகுதியில் அநேகமாக கட்டப்பட இருக்கும் இடம் இதுவாகத்தான், ஒரு இடத்தின் படத்தையும் வெளியிட்டுள்ளது. உக்ரைன் போருக்காக ஈரான்- ரஷியா டிரோன் தயாரிப்பில் ஈடுபடலாம் என கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டிந்தார். ஆனால், உக்ரைன் மீதான போர் தொடங்குவதற்கு முன் ரஷியாவுக்கு டிரோன் வழங்கி கொண்டிருந்தோம். ஆனால் தற்போது வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது. ஆனால் ஈரான் தொடர்ந்து ரஷியாவுக்கு ஈரானில் தயாரிக்கப்பட்ட டிரோன்களை வழங்கி வருகிறது. இந்த டிரோன்கள் ஈரானின் அமிராபாத்தில் இருந்து ரஷியாவின் மகாச்கலா என்ற இடத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அதன்பிறகு உக்ரைனுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என அமெரிக்கா உறுதியாக நம்புகிறது. Read More
எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன். கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்தபோது நாடு தழுவிய ஊரடங்கு இங்கிலாந்தில் பிறப்பிக்கப்பட்டது. அப்போது இவர் தனது அலுவலகத்தில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்னும் அந்த பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. அவர் அலுவலகத்தை தவறாக பயன்படுத்தினாரா? என்பது குறித்து விசாரணை நடத்த சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்தி வருகிறது. ஒருவேளை அவர் தவறாக பயன்படுத்தினார் என இந்தக்குழு அறிக்கை தாக்கல் செய்தால், நாடாளுமன்றத்தில் இருந்து 10 நாட்கள் இடைநீக்கம் செய்யப்படுவார். இந்த நிலையில் போரிஸ் ஜான்சன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் அவர் வெற்றி பெற்றிருந்த தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடைபெற்ற இருக்கிறது. ''நாடாளுமன்றத்தில் விட்டு வெளியேறுவது மிகவும் கஷ்டமாக உள்ளது. அதுவும் தற்போதை நிலையில்... சிலருடைய குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரம் இல்லாமலும், குறைந்தபட்சம் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்ளின் ஒப்புதல் கூட இல்லாமலும் சிலரால் நான் கட்டாயப்படுத்தப்படுகிறேன். விசாரணைக்குழுவிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் என்ன வியப்பு என்றால், என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் பயன்படுத்துவதில் உறுதியாக இருந்தனர் என்பது தெரியவந்தது'' என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். Read More
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 8ம் தேதி சென்னை வருவதாக இருந்தது. தற்போது அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து இன்று இரவு சென்னைக்கு புறப்படுகிறார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா குறி வைத்துள்ள தொகுதிகளில் தென் சென்னை தொகுதியும் ஒன்று. அதற்கு காரணம் பா.ஜனதா தனித்து போட்டியிட்டே இந்த தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் பெற்று உள்ளது. எனவே இந்த தொகுதியில் தனிக்கவனம் செலுத்துகிறது. வருகிற தேர்தலில் இந்த தொகுதியை கைப்பற்ற பா.ஜனதாவினருக்கு அமித்ஷா வியூகம் அமைத்து கொடுப்பார் என்று கூறப்படுகிறது. தொகுதியில் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் அவர் ஆலோசனை வழங்குவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர் சென்னை நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் சென்னை விமான நிலையம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் புறப்பட்டு செல்கிறார். வேலூரில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த இரு நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு டெல்லி புறப்பட்டு செல்கிறார். Read More
நவி மும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்ட முடிவு
விமான போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு நவி மும்பையில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட உள்ளது. புதிய விமான நிலையம் நவி மும்பையில் உள்ள உல்வேயில் மும்பை பெருநகரப் பகுதியின் மையத்தில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலைய ஆபரேட்டர்களில் ஒன்றான அதானி விமான நிலையத்தால் இந்த விமான நிலையம் கட்டப்பட்டு நிர்வகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு கட்டங்களாக கட்டப்படவுள்ள இந்த விமான நிலையத்தை உலகின் மிகவும் ஆற்றல் திறன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு நிலையான வகையில் மாற்றும் திட்டம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும். விமான நிலையம் முழுவதும் சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்படும். இது பசுமை மின்சாரத்தையும் பரவலாகப் பயன்படுத்தும், அதில் பெரும்பகுதி சூரிய சக்தியை தளத்தில் உற்பத்தி செய்யும் என்று திட்டத்தை நிர்வகிக்கும் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தேசிய மலரான தாமரையால் ஈர்க்கப்பட்டு முனையம் வடிவமைக்கப்படுகிறது. நவி மும்பையில் 1160 ஹெக்டேர் பரப்பளவில் கட்டப்படும் சர்வதேச விமான நிலையம் முதல் இரண்டு கட்டங்கள் டிசம்பர் 2024க்குள் முடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணைத் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் இணைந்து, விமான நிலைய பணிகளை நேற்று ஆய்வு செய்தார். தளத்தில் வான்வழி ஆய்வுக்குப் பிறகு, இரு தலைவர்களுக்கும் அதானி குழுமத்தின் பிரதிநிதிகள் விமான நிலையத்தின் அம்சங்கள் குறித்து விரிவான விளக்கத்தை அளித்தனர். புதிய விமான நிலையம் மகாராஷ்டிராவுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் முக்கியமானதாக இருக்கும் என்றும் மும்பை விமான நிலையத்தின் நெரிசலை குறைக்கும் என்று முதல்வர் கூறினார். Read More
கத்திகுத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிரான்ஸ் அதிபர்
பூங்காவில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் கையில் கத்தியுடன் பூங்காவிற்குள் நுழைந்தான். திடீரென அவன் அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை சரமாரியாக கத்தியால் குத்த தொடங்கினான். இதில் கத்திக்குத்து விழுந்த குழந்தைகள் வலி பொறுக்க முடியாமல் அலறி துடித்தனர். இந்த தாக்குதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 22 மாத குழந்தை, 5 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்கள், 2 பெரியவர்கள் அடங்குவார்கள். இந்த சம்பவத்தை… Read More
தேனிலவுக்காக இந்தோனேஷியா சென்ற மருத்துவ தம்பதி கடலில் மூழ்கி மரணம்
சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர் குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் மருத்துவர் விபூஷ்னியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரனுக்கும் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி அன்று வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு இருவரும் இந்தோனேசியாவிற்கு தேனிலவு சென்றனர். இந்நிலையில், இந்தோனேஷியாவில் பாலி தீவில் உள்ள கடலில் இருவரும் மோட்டார் போட்டில் சென்றபோது போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருவரும் திடீரென படகில் இருந்து விழுந்து நீரில் மூழ்கினர். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் தம்பதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், லோகேஸ்வரன் சடலமாக மட்டுமே கிடைத்துள்ளார். விபூஷ்னியாவின் உடலை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இந்திய, தமிழக அரசு மற்றும் அவர்களது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருவரின் சடலங்களை இந்தியாவிற்கு எடுத்து வருவது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருமணமான 10 நாளில் மருத்துவ தம்பதி உயிரிழந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
சொகுசு காரில் வந்து டீ விற்கும் மும்பை வாலிபர்கள்
சொகுசு கார்களை பலர் தங்கள் வாழ்நாள் கனவாக வைத்திருப்பார்கள். ஆனால் ஆடம்பரம் நிறைந்த அந்த காரை ஒரு டீக்கடையாக நினைத்து பார்க்க முடியுமா!. ஆனால் மும்பையில் 2 வாலிபர்கள் தங்கள் சொகுசு காரை டீக்கடையாக மாற்றி, பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். மன்னு சர்மா மற்றும் அமித் கஷ்யப் ஆகியோர் தான் அந்த வாலிபர்கள். அவர்கள் சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரின் டிக்கியில் 20 ரூபாய்க்கு டீ விற்கின்றனர். அந்தேரி மேற்கு புறநகர் பகுதியில் உள்ள லோகந்தவாலாவில் அவர்கள் 6 மாதங்களாக இந்த சொகுசு கார் டீக் கடையை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் அவர்களின் இந்த டீக்கடை சமூக வலைதளங்களில் பிரபலமானது. இதனால் கடைக்கு கூட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் வாலிபர்களின் தனித்துவமான எண்ணம் மட்டும் அல்ல, 'டீ'யின் சுவையும் தான் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதாக கூறுகின்றனர். அதற்கு ஏற்றார்போல் அங்கு வரும் வாடிக்கையாளர் ஒருவர், "கடந்த 2 மாதங்களாக நான் இங்கு 'டீ' குடிக்க வருகிறேன். ஏனென்றால் அதன்… Read More
அமெரிக்காவாழ் இந்தியர்களிடம் ஜூன் 23 ஆம் தேதி பிரதமர் மோடி பேசுகிறார்
பிரதமர் மோடி இம்மாதம் 21-ந் தேதி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவருடைய மனைவி ஜில் பைடன் ஆகியோரது அழைப்பின்பேரில் அவர் செல்கிறார். 22-… Read More
டெல்லி விமான நிலையத்தில் செல் போனில் பேசிய நபர் வெடி குண்டு என்று சொன்னதால் கைது
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானம் நேற்று மாலை 4.55 மணியளவில் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது ஒரு ஆண் பயணி செல்போனில் பேசும்போது வெடிகுண்டு என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இது, அருகில் இருந்த பெண் பயணியின் காதில் விழ, அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி விமான ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். விமான ஊழியர்கள், மத்திய தொழிலக பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். பாதுகாப்பு படையினர் வந்ததும் பரபரப்பு ஏற்பட்டது. செல்போனில் பேசிய ஆண் பயணி, புகார் அளித்த பெண் பயணி இருவரும் கீழே இறக்கப்பட்டு, விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. ஆனால் விமானத்தில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை. ஆனால் செல்போனில் பேசிய பயணி கைது செய்யப்பட்டு, விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மற்ற பயணிகளுடன் விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- வேலை நிமித்தமாக துபாய்க்கு புறப்பட்ட பயணி தனது தாயுடன் தொலைபேசியில் பேசியபோது, அவரின் அருகில் அமர்ந்திருந்த பெண் பயணிக்கு அந்த உரையாடல் கேட்டுள்ளது. அப்போது, "வெடிகுண்டு இருக்கலாம் என்று பயந்து சிஐஎஸ்எப் வீரர்கள் தனது பையில் தேங்காயை அனுமதிக்கவில்லை, ஆனால் பையில் வைத்திருந்த பான் மசாலாவை கொண்டு செல்ல அனுமதித்தனர்" என பேசியிருக்கிறார். இதில் வெடிகுண்டு என்ற வார்த்தையை கேட்டதும் பெண் பயணி புகார் அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். Read More
எதிர்க்கட்சிகளின் விருப்பம் பீகார் மேம்பாலம் போல் இடிந்து விழும் – அமைச்சர் ஸ்மிரிதி இரானி தாக்கு
அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள திட்டமிட்டு வருகின்றன. இது தொடர்பாக விவாதிப்பதற்காக வருகிற 23-ந்தேதி பீகாரில் எதிர்க்கட்சித்தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இடதுசாரி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டத்தை மத்தியில் ஆளும் பா.ஜனதா குறைகூறியுள்ளது. இது தொடர்பாக பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியுமான ஸ்மிருதி இரானி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக நிற்க முடியாது என்பதால், தங்களுக்குள்ளேயே ஆதரவு பெறுவதற்கு விரும்புகின்றனர். இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு, ரூ.1,750 கோடியில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்த இடத்துக்கு (பீகார்) செல்கின்றனர். ஆனால் பாராளுமன்ற தேர்தலுக்கான அவர்களது விருப்பமும், அந்த பாலத்தைப்போலவே 2024-ல் இடிந்து விழும்' என்று தெரிவித்தார். பீகாரில் கங்கை நதியின் குறுக்கே சுமார் ரூ.1,750 கோடியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட பாலம் சமீபத்தில் 2- வது முறையாக… Read More