X

செய்திகள்

தள்ளுபடி விலையில் ரஷ்யாவில் இருந்து அனுப்பப்பட்ட கச்சா எண்ணெய் பாகிஸ்தான் வந்தடைந்தது – பிரதமர் ஷெரீப் தகவல்

ரஷியா தள்ளுபடி விலையில் வழங்கும் கச்சா எண்ணெய்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் கராச்சி வந்தடைந்ததாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் தெரிவித்துள்ளார். கடும் பண வீழ்ச்சியால் விலைவாசி உயர்வு அதிகமாக காணப்படும் நிலையில், இது சற்று ஆறுதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 262 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக ரஷியாவில் இருந்து 45 ஆயிரம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கராச்சி வந்தடைந்துள்ளது. ''நான் வழங்கிய மற்றொரு வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த முதல் சரக்கு கப்பல் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் வந்தது என்பதை பெருமையாக அறிவித்துக்கொள்கிறேன். நாளையில் இருந்து வினியோகம் செய்யப்படும். இன்றைய நாள் மாற்றத்தை ஏற்படுத்தும் நாள். எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சியில் ஒருபடி முன்னேறியுள்ளோம்'' எனத் தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு ஒரு… Read More

பாகிஸ்தானில் கன மழை வெள்ளத்தில் சிக்கி குழந்தைகள் உள்ளிட்ட 34 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர். பேரிடர் குழுவால்… Read More

மக்கள் தொகை வீழ்ச்சியை தொடர்ந்து திருமண பதிவிலும் சரிவை சந்திக்கும் சீனா

சீனா ஏற்கனவே மக்கள் தொகையில் வீழ்ச்சயிடைந்த நிலையில், தற்போது திருமண பதிவின் எண்ணிக்கையிலும் சரிவை கண்டுள்ளது. குறிப்பாக கடந்த 2022- ம் ஆண்டில் திருமண பதிவுகள் குறைந்துள்ளதாக… Read More

கருணாநிதி உருவ வடிவில் அணிவகுத்து நின்ற தூற்மை பணியாளர்கள்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று காலை திரண்ட 2752 தூய்மை பணியாளர்கள் கருணாநிதி உருவ வடிவில் அணிவகுத்து நின்றனர். டிரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சியில் தத்ரூபமாக அமைந்திருந்த கருணாநிதியின் படம். Read More

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள பிபோர்ஜோய் புயல், அடுத்த 36 மணி நேரத்தில் மீண்டும் தீவிரம் அடைந்து வடகிழக்கு திசையிலும், அடுத்த 3 நாட்களில் வடமேற்கு திசையிலும் நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாகவும் கேரளாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மாநிலத்தில் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் பேரிடர் மீட்பு துறையினர் உஷார் நிலையில் இருக்கும்படி மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா உள்பட 8 மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. Read More

டுவிட்டரில் கிரியேட்டர்கள் பணம் சம்பாதிக்க புதிய வழி – எலான் மஸ்க் அறிவிப்பு

உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டர், விரைவில் கிரியேட்டர்களும் பணம் சம்பாதிக்க செய்யும் புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இதனை டுவிட்டரை விலைக்கு வாங்கியிருக்கும் எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறார். டுவிட்டர் தளத்தில் கிரியேட்டர்கள் பதிவிடும் டுவிட்களில் விளம்பரங்களை வழங்கி, அதில் இருந்து கிடைக்கும் வருவாயை கிரியேட்டர்களுக்கு பங்கிட்டு கொடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக முதற்கட்டமாக 5 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். "கிரியேட்டர் வெரிஃபைடு பெற்றிருக்க வேண்டும். மேலும் வெரிஃபைடு பயனர்களுக்கு மட்டுமே விளம்பரங்கள் வழங்கப்படும்," என்று எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக விலைக்கு வாங்கிய எலான் மஸ்க், அதில் ஏராளமான மாற்றங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். அதன்படி டுவிட்டர் தளத்தில் பயனர்களுக்கு வெரிஃபைடு அந்தஸ்தை வழங்கும் வகையில் புளூ சந்தா அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது கட்டணம் செலுத்துவோருக்கு வெரிஃபைடு அந்தஸ்த்து, கூடுதலாக புதிய வசதிகளை விரைந்து வழங்கி வருகிறது. Read More

அம்மாவுக்காக தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லம் கட்டிய மகன்!

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் . இவரது மனைவி ஜெய்லானி பீவி. இவர்களுக்கு 4 மகள்,  1 மகன் உள்ளனர். இவர் சென்னையில்… Read More

அதிதீவிர புயலாக உருவெடுத்த பிபோர்ஜோய் – 3 மாநிலங்களில் அதிகன மழை

அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இந்த அதிதீவிர புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து வடக்கு மற்றும் வடகிழக்கு… Read More

பணியின் போது ரெயில் என்ஜின் ஒட்டுநர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை

ஒடிசா ரெயில் விபத்தில் 288 பயணிகள் பலியானது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயில் மதுரை கோட்டத்தில் பணியின் போது ரெயில் என்ஜின் டிரைவர்கள் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை விதித்து அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இதுகுறித்து ரெயில்வே வட்டாரத்தினர் கூறியதாவது:- தற்போது 'ஸ்மார்ட் வாட்ச்' பயன்பாடு அதிகரித்துள்ளதால் 'புளூ டூத்' மூலம் வாட்சில் கனெக்ஷன் ஏற்படுவதால் அதில் அழைப்புகள் வந்தால் தெரிந்துவிடும். மேலும் சில 'ஸ்மார்ட் வாட்ச்'கள் 'போர்ட்டபிள் மீடியா பிளேயர்'களாக செயல்படுகின்றன. எப்.எம். ரேடியோ மற்றும் புளூடூத் ஹெட்செட் வழியாக டிஜிட்டல் ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை இயக்குகின்றன. இதனால் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிந்து பணியாற்றுகிற போது இதுபோன்ற காரணங்களால் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ரெயில் வேகமாக செல்லும்போது கவன சிதறல் ஏற்பட்டால் விபரீதமாகிவிடும். அதனால் இந்த உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவு சென்னை கோட்டத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி அடுத்தடுத்து நடைமுறைப்படுத்துவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர். Read More

மகாராஷ்டிரா அமைச்சரவையில் 4 முக்கிய அமைச்சர்களை நீக்க உத்தரவிட்ட அமித்ஷா? – சஞ்சய் ராவத் தகவல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை கைப்பற்றி, பா.ஜனதா துணையுடன் ஏக்நாக் ஷிண்டே முதல்வராக இருந்து வருகிறார். அவருடைய கட்சியனருக்கும் உத்தவ் தாக்கரே கட்சியினருக்கும் இடையில் கருத்து மோதல்கள் இருந்து வருகிறது. பா.ஜனதாவின் பட்நாவிஸ் துணை முதல்வராக இருக்கிறார். மகாராஷ்டிரா மாநில மந்திரிசபை விரிவாக்கம் விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சலசலப்பு ஏற்படும் என உத்தவ் தாக்கரே கட்சியின் முக்கிய தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, சிவசேனாவின் நான்கு முக்கிய மந்திரிகளை நீக்குமாறு ஏக்நாத் ஷிண்டேயிடம் கேட்டுக்கொண்டதாக ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறுகையில் ''மந்திரிசபை மாற்றம் குறித்து அமித் ஷா சில தகவல்களை ஷிண்டேவிடம் தெரிவித்துள்ளார். விரிவாக்கம் அதன்படி நடைபெற்றால் ஷிண்டே, அவரது முக்கியமான நான்கு மந்திரிகளை நீக்க வேண்டியிருக்கும். இது என்னுடைய தகவல்'' எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷிண்டேவின் சிவசேனா கட்சி செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஷிர்சத் கூறுகையில் ''மற்றவர்கள் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் அவருடைய பழக்கமாக இது இருக்கலாம்'' என குறிப்பிட்டார். ஒருவேளை முக்கிய மந்திரிகள் நீக்கப்பட்டால் சலசலப்பு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலின்போது உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, பாஜனதா கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. தேர்தலில் ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களை விட அதிகமான இடங்களை இந்தக் கூட்டணி பிடித்தது. என்றாலும், முதல் பதவி வேண்டும் என உத்தவ் தாக்கரே அடம் பிடித்ததால் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைத்தது. பின்னர் சிவசேனா கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் சிவசேனா கட்சியை கைப்பற்றி முதல்வர் பதவியையும் பெற்றுக்கொண்டார். Read More