X

அமிதாப் பச்சனுக்கு ஜோடியான ரம்யா கிருஷ்ணன்

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முதல்முறையாக எஸ்.சூர்யாவுடன் இணைந்து நேரடி தமிழ்ப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ்வாணன் இயக்கத்தில் ‘உயர்ந்த மனிதன்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், படத்தில் அமிதாப் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரம்யா கிருஷ்ணன் ஏற்கனவே அமிதாப் பச்சனுடன் இணைந்து ஒரு இந்தி படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமெண்ட்ஸ் பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள். தமிழ், மற்றும் இந்தியில் இந்த படம் உருவாகி வருகிறது.