X

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 49 லட்சத்தை நெருங்குகிறது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளில் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்தும் மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைரசின் தீவிரம் அதிகரித்துள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 49 லட்சத்தை நெருங்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 48 லட்சத்து 91 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 3 லட்சத்து 20 ஆயிரத்து 137 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 7423 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 44 ஆயிரத்து 767 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா வைரசால் அதிகம் பாதிப்பு அடைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், ரஷ்யா இரண்டாவது இடமும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தியா 11-வது இடத்தில் உள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்த நாடுகள் வருமாறு:

அமெரிக்கா- 1,550,294
ரஷியா-290,678
ஸ்பெயின் -278,188
பிரேசில்- 255,368
பிரிட்டன்- 246,406
இத்தாலி- 225,886
பிரான்ஸ்- 179,927
ஜெர்மனி- 177,289
துருக்கி- 150,593
ஈரான்- 122,492
இந்தியா- 100,328