ஐசிசி விதியை கிண்டல் செய்த நடிகர் அமிதாப் பச்சான்

உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டம் டை (சமன்) ஆன பிறகு கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரும் சமன் ஆனதால் அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) இந்த விதிமுறை கேலிக்கூத்தானது, அதை தூக்கி எறிய வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் பவுண்டரி விதிமுறையை இந்தி நடிகர் அமிதாப்பச்சன் வித்தியாசமாக விமர்சித்துள்ளார். ‘உன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் ஒரே நோட்டாக இருக்கிறது. என்னிடம் ரூ.2 ஆயிரம் நான்கு 500 ரூபாய் நோட்டுகளாக இருக்கிறது. நம்மில் யார் பணக்காரர் என்று கேட்க அதற்கு நான்கு 500 ரூபாய் நோட்டு வைத்துள்ளவரே பணக்காரர்’ என்று ஐ.சி.சி. சொல்வது போல் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார்.

இதே போல் இந்தி நடிகரும், அரசியல்வாதியுமான பரேஷ் ரவால் தனது டுவிட்டர் பதிவில் ‘டோனியின் கையுறையை மாற்றுவதற்கு பதிலாக ஐ.சி.சி. முட்டாள்தனமான இத்தகைய விதிமுறைகளை மாற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools