X

ஒடிசாவை அலங்கோலப்படுத்திய பானி புயலுக்கான அர்த்தம் தெரியுமா?

புயல் என்றாலே அதற்கு பெயர் சூட்டப்படுவது வழக்கம். அந்த வகையில் வங்க கடலில் உருவாகி நேற்று காலை ஒடிசாவை தாக்கிய புயலுக்கு ‘பானி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது. இது இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசம் சூட்டிய பெயர் ஆகும்.

அந்த நாட்டு மொழியில் (வங்காளி) ‘பானி’ என்றால் படமெடுத்து ஆடும் பாம்பு என்று அர்த்தம்.

நல்ல பாம்பு படமெடுத்து ஆடுவது போன்றே, ‘பானி’ புயல் ஒடிசாவில் ருத்ரதாண்டவம் ஆடி பலத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டது.