X

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு வருகிற 21-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

அங்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

பிரதமர் மோடி கடந்த சில தினங்களாக பா.ஜனதா – சிவசேனா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அவர் அகோலா என்ற இடத்தில் நடந்த பிரசாரத்தில் இன்று பங்கேற்றார்.

பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:-

காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் ஊழல்வாத கூட்டணி. இந்த கூட்டணி 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து மகாராஷ்டிரா மாநிலத்தை சீரழித்து விட்டது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்தது குறித்து காங்கிரஸ் கூட்டணியினர் மகாராஷ்டிரா தேர்தலில் பிரச்சினை எழுப்புவது மிகவும் அவமானமானது.

காஷ்மீர் விவகாரம் மகாராஷ்டிரா தேர்தலில் எந்தவிதத்திலும் பாதிக்காது என்பதை எதிர்க்கட்சிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்துத்வா சிந்தனையாளரான சாவர்க்கர் இந்த நாட்டுக்காக பெரும்பாடுபட்டவர். தேசியத்தை ஊக்குவித்தவர். பாரத ரத்னா விருதுக்கு சாவர்க்கர் தகுதியானவர்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.