சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு – 88 பேர்களது தண்டனை உறுதி செய்த நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி அவரது சீக்கிய பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது.

டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள திரிலோக்புரியில் நடந்த கலவரத்தில் 95 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 100 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன.

இது தொடர்பாக 1984-ம் ஆண்டு நவம்பர் 2-ந்தேதி 107 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 88 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து 1996-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ந்தேதி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி 88 பேரும் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது 22 ஆண்டு காலமாக விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.கே.குப்தா செசன்ஸ் கோர்ட்டு அளித்த தீர்ப்பை உறுதி செய்து நேற்று உத்தரவிட்டார். இதன் மூலம் 88 பேரின் 5 ஆண்டுகால சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது.

எனினும் குற்றவாளிகளில் பலர் விசாரணை காலத்திலேயே இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools