X

சூரிய கிரகணத்திற்காக திருப்பதி கோவில் 13 மணி நேரம் மூடப்பட்டது!

விடுமுறை தினத்தை யொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை 8.07 மணி முதல் 11.16 மணி வரை சூரிய கிரகணம் ஏற்பட்டது.

இதனையொட்டி நேற்று இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. 13 மணி நேரத்திற்கு பின்னர் இன்று மதியம் 12 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கோவில் வளாகம் முழுவதும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் ஏழுமலையானுக்கு சிறப்பு அபிஷேகம், கிரகண நிவர்த்தி பூஜைகள் நடந்தன.

இதனையடுத்து மதியம் 2.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

நேற்று இரவு முதல் பக்தர்கள் அறைகளில் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். நேற்று இரவு வரை சாமி தரிசனத்திற்கு 18 மணி நேரம் ஆனது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தமிழக பக்தர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். இன்று தரிசன நேரம் மேலும் அதிகரிக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

பக்தர்களுக்கு உணவு, பால் வழங்கப்பட்டன. பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: south news