”தமிழர்களின் விருந்தோம்பல் சிறந்தது”! – பிரதமர் மோடி பேச்சு

சென்னை ஐஐடி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். சென்னை விமானம் நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஐடிக்கு சென்றார்.

இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்தும் ‘ஹேக்கத்தான்’ தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்ற மூன்று குழுக்களுக்கு பிரதமர் மோடி பரிசுகளை வழங்கினார்.

பிறகு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழர்களின் விருந்தோம்பல் சிறந்தது, என்று பாராட்டியதோடு, காலை உணவான இட்லி, தோசை, வடை போன்ற உணவுகள் உற்சாகம் தரும், என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசியவர், “சிங்கப்பூருடன் இணைந்து இந்த ஹேக்கத்தான் நடத்த யோசனை கூறியதில் பெருமை கொள்கிறேன். ஹேக்கத்தான் வெற்றிக்கு உதவிய சிங்கப்பூர் கல்வி அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
பல நாடுகளின் மாணவர்களின் யோசனைகளை பரிமாறிக்கொள்ள உதவுகிறது ஹேக்கத்தான். இளம் தலைமுறையின் அறவுத்திறனை வளர்க்க ஹேக்கத்தான் உதவும். புதிய தொழில் தொடங்கும் உத்வேகத்தை ஹேக்கத்தான் வழங்கும் என நம்புகிறேன். இந்தியா 5 லட்சம் கோடி பொருளதாரமாக வளர இந்த ஹேக்கத்தான் உதவும்” என்று தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools