X

தர்பார் படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிறது

ரஜினியின் 167-வது படமான ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ரஜினி நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் `தர்பார்’ படத்தின் தகவல்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா நேற்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

’தர்பார்’ படத்தில் நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாக நடிக்கிறார் என்கிற செய்தி வெளியாகி இருக்கிறது. தர்பார் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

இதில் படப்பிடிப்பு நடைபெறும் இடம் மருத்துவமனை போல உள்ளது. அங்கிருந்து நிவேதா தாமஸ் மற்றும் யோகிபாபு இருவருடன் ரஜினி நடந்து வருகிறார். யோகிபாபுவின் காஸ்டியூம் பார்க்கும்போது, அவர் ரஜினியின் அசிஸ்டன்டாக நடிக்கலாம் என தோன்றுகிறது.

இதற்கிடையே ரஜினிகாந், நயன்தாரா நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்களும் வெளியாகி படக்குழுவுக்கு அதிச்சியை அளித்துள்ளது.