X

முதல்வர் பதவிக்கு ஓய்வு விட்ட மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தின் கிராம பகுதிகளை பார்வையிட்டு, மக்களிடம் உரையாடும் பணியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் நேற்று திகா பகுதியில் உள்ள துட்டா எனும் கிராமத்திற்கு நடைப்பயணமாக சென்றார்.

அப்போது அப்பகுதியில் வசிக்கும் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். திடீரென அங்கிருந்த ஒரு டீ கடையில் நின்ற அவர், உள்ளே சென்று டீ போடும் இடத்தில் நின்றுக் கொண்டார். பின்னர் தானாகவே டீ போட தொடங்கினார்.

அதன் பின்னர் அந்த டீயினை அருகில் இருந்த அங்கு வசிக்கும் மக்களுக்கும், தொண்டர்களுக்கும் தானே பரிமாறி மகிழ்ந்தார். இதனை மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டிருந்தார்.

இதில், ‘சில சமயங்களில் நாம் செய்யும் சிறிய செயல் நம்மை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அவற்றில் ஒன்றுதான் நாமே டீ போட்டு மற்றவர்களுக்கு பரிமாறுவது’ என குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ பலராலும் பார்க்கப்பட்டு, வேகமாக பகிரப்பட்டது. மேலும் பலரும் மம்தாவினை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.