தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 17 காவல் உதவி ஆய்வாளர்கள் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:
ஐ. அந்தோணி திலிப் – தூத்துக்குடி வடபாகம் நிலையத்திலிருந்து முறப்பநாட்டிற்கு
ஆா். சோனியா – தூத்துக்குடி தென்பாகம் நிலையத்திலிருந்து திருச்செந்தூர் தாலுகாவிற்கு
எம். அனுஷியா – தெர்மல்நகர் நிலையத்திலிருந்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு
பி. ராமச்சந்திரன் – தாளமுத்துநகர் நிலையத்திலிருந்து நாலாட்டின்புதூருக்கு
ஆா். சிலுவை அந்தோணி – தாளமுத்துநகர் நிலையத்திலிருந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு
எஸ். முகேஷ் அரவிந்த் – புதுக்கோட்டை நிலையத்திலிருந்து குலசேகரன்பட்டினத்திற்கு
அமலோற்பவம் – சிப்காட் நிலையத்திலிருந்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு
ஆா். தரனியா – திருச்செந்தூர் கோயில் நிலையத்திலிருந்து தூத்துக்குடி தென்பாகத்திற்கு
ஜி. முத்துச்செல்வம் – திருச்செந்தூர் தாலுகா நிலையத்திலிருந்து புதுக்கோட்டைக்கு
யு. பாலன் – ஆழ்வார்திருநகரி நிலையத்திலிருந்து செய்துங்கநல்லூருக்கு
ஆா். மாணிக்கராஜ் – கோவில்பட்டி கிழக்கு நிலையத்திலிருந்து தாளமுத்துநகருக்கு
பி. சுந்தா் – நாலாட்டின்புதூர் நிலையத்திலிருந்து தாளமுத்துநகருக்கு
பி. ராமலட்சுமி – குளத்தூர் நிலையத்திலிருந்து திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்திற்கு
ஆனந்தமுத்துராமன் – தூத்துக்குடி தென்பாகம் நிலையத்திலிருந்து தெர்மல்நகருக்கு
எம். செல்வன் – விளாத்திகுளம் உள்கோட்ட தனிப்பிரிவிலிருந்து தனிப்பிரிவு தலைமையிடத்திற்கு
பி. சுப்புராஜ் – முறப்பநாடு நிலையத்திலிருந்து தூத்துக்குடி தென்பாகத்திற்கு
எம். கவுராஜன் – தூத்துக்குடி தென்பாகம் நிலையத்திலிருந்து சிப்காட்டிற்கு
தனிப்பிரிவு, தலைமைக்காவலர்கள் & சிறப்பு உதவி ஆய்வாளர்கள்:
இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு உள்கோட்டங்களைச் சேர்ந்த தனிப்பிரிவு காவலர்கள், தலைமைக்காவலர்கள் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்:
எஸ். ஜெகநாதன் (ஸ்ரீவைகுண்டம் உள்கோட்ட தனிப்பிரிவு எஸ்.ஐ) – ஸ்ரீவைகுண்டத்திற்கு
வி. முருகானந்தம் (மணியாச்சி உள்கோட்டம்) – மணியாச்சிக்கு
கே. ராஜா (ஸ்ரீவைகுண்டம் தனிப்பிரிவு தலைமைக்காவலர்) – ஸ்ரீவைகுண்டத்திற்கு
எம். சங்கரசுப்பு (செய்துங்கநல்லூர்) – ஏரலுக்கு
கே. விடுதலைபாரதிகண்ணன் (நாரைக்கிணறு) – பசுவந்தனைக்கு
கே.எஸ். செல்வகுமாா் (பசுவந்தனை) – ஓட்டப்பிடாரத்திற்கு
எஸ். மயில்ராஜ் (கடம்பூர்) – மணியாச்சிக்கு
பி. சிசில் வினோத் (கொப்பம்பட்டி) – கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு
எஸ். ஜெயச்சந்திரன் (விளாத்திகுளம்) – கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு
வி. ஜான்சன் (முத்தையாபுரம் தனிப்பிரிவு காவலர்) – தூத்துக்குடி தென்பாகத்திற்கு
எம். மருதவிநாயகம் (தட்டப்பாறை) – நாசரேத்திற்கு
ஏ. அந்தோணிகுமாா் (மெஞ்ஞானபுரம்) – நாசரேத்திற்கு
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்:
சங்கா் (ஏரல் தனிப்பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்) – ஸ்ரீவைகுண்டம் உள்கோட்டத்திற்கு
சங்கா் (கடம்பூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்) – மணியாச்சி உள்கோட்டத்திற்கு
எஸ். டேனியல் ராஜாசிங் (எப்போதும்வென்றான்) – விளாத்திகுளம் உள்கோட்டத்திற்கு
ஆா். சுப்பிரமணியன் (தெர்மல் நகர்) – தூத்துக்குடி வடபாகத்திற்கு
27 காவல் நிலையங்களின் தனிப்பிரிவினர் மாற்றம்:
இதுதவிர, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மொத்தம் 27 காவல் நிலையங்களில் தற்போது பணியாற்றி வரும் தனிப்பிரிவு தலைமைக்காவலர்கள் மற்றும் காவலர்களும் மொத்தமாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்துவதற்காகவும், பணிகளை முறைப்படுத்துவதற்காகவும் இந்த அதிரடி கூட்டு இடமாற்றத்திற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா பிறப்பித்துள்ளார். ஒரே நாளில் மாவட்ட அளவில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தனிப்பிரிவினர் பெருமளவில் மாற்றப்பட்டிருப்பது மாவட்ட காவல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.