X

சென்னையில் 36 புதிய பூங்காக்கள், 11 புதிய விளையாட்டுத் திடல்கள்! – மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை மாநகர மக்களின் பயன்பாட்டிற்காகப் பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பசுமைப் பரப்பளவை அதிகரிக்கும் வகையிலும், நகர்ப்புற விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும் முதற்கட்டமாக ரூ.43.97 கோடி மதிப்பீட்டில் 36 புதிய பூங்காக்கள் மற்றும் 11 புதிய விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படவுள்ளதாகப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் திறந்தவெளிகளை மீட்டெடுத்து, அவற்றில் 36 புதிய பூங்காக்களை அமைப்பதற்காக ரூ.34.45 கோடியும், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் விளையாட்டுத் திறன்களை ஊக்கப்படுத்தும் வகையில் 11 நவீன விளையாட்டுத் திடல்களை அமைக்க ரூ.9.52 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புறக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் உடற்பயிற்சி செய்ய ஏதுவான வசதிகளுடன் உருவாக்கப்படவுள்ள இந்தத் திட்டங்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, பணிகள் விரைந்து தொடங்கப்படவுள்ளது சென்னைவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.