X

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கடல் வழியாக பயணிகள் பயணம் செய்யும் படகு சேவை! – தமிழ்நாடு கடல்சார் வாரியம் தீவிரம்

சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாகப் புதுச்சேரி வரை கடல் வழியாகப் பயணிகள் பயணம் செய்யும் புதிய பயணிகள் படகு சேவையைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு கடல்சார் வாரியம் தீவிரப்படுத்தியுள்ளது. சாலை வழிப் போக்குவரத்தின் நெரிசலைக் குறைப்பதோடு, கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இந்தப் புதிய கடல்வழிப் போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த அதிநவீனப் பயணிகள் படகு சேவையைச் வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கும், இயக்குவதற்கும் தகுதியான தனியார் நிறுவனங்களிடம் இருந்து விருப்பக் கோரிக்கை ஆவணங்களை (EOI) தமிழ்நாடு கடல்சார் வாரியம் அதிகாரப்பூர்வமாகக் கோரியுள்ளது.

அரசு தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த விருப்பக் கோரிக்கைக்கான விவரங்கள் மற்றும் ஆவணங்களை அதிகாரப்பூர்வமான இணையதளம் மூலமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் சென்னை மற்றும் புதுச்சேரி இடையேயான கடல்வழிப் பயணம் சாத்தியமாகவிருப்பதுடன், இப்பகுதியில் சுற்றுலாவும் கடல்சார் வணிகமும் பெருமளவு வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.