X

நேபாள பெருவெள்ளப் பாதிப்புகளில் 5,285 பேர் காணாமல் போனவர்களாக அறிவிப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும், வெள்ள நீர் வடிந்து மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்லத் திரும்பி வரும் வேளையில், பலியானவர்கள் மற்றும் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு இடையே 5,285 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இதில் பின்லாந்தில் பொது சுகாதார நிபுணராகப் பணியாற்றி வந்த 40 வயதான பிரியங்கா சௌத்ரி என்ற பெண்மணியும் அடங்குவார். நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான இவரது நிலை என்னவென்று தெரியாமல், சத்தீஸ்கரில் உள்ள அவரது குடும்பத்தினர் எந்தவொரு தகவலும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

அதிகாரப்பூர்வமாக இறப்பு அறிவிப்போ அல்லது மீட்பு குறித்த தகவலோ வராததால், இந்த ஆயிரக்கணக்கான காணாமல் போனவர்களின் குடும்பங்கள் இறுதித் தகவல் மற்றும் நீதி கிடைக்காமல் இரண்டு மாதங்களாகத் தொடர் சோகத்தில் ஆழ்ந்துள்ளன.

Tags: nepal flood