X

சலானி குழுமத்தின் புதிய விளம்பர தூதரான ஜேசன் சஞ்சய்!

தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் மகனும், சமீபத்தில் வெளியான ‘சிக்மா’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக களம் இறங்கிய ஜேசன் சஞ்சய், பிரபல நகைக்கடையான சலானி குழுமத்தின் புதிய விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்த அறிவிப்பு மற்றும் ஜேசன் சஞ்சயை விளம்பர தூதுவராக அறிமுகப்படுத்தும் விழா இன்று (அக்.24) சென்னை, சத்யம் பி.வி.ஆர் திரையரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில், சலானி குழுமத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி, குழுமத்தின் புதிய விளம்பர தூதரான ஜேசன் சஞ்சயை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் இயக்குநர் கெளதம் சலானி, ரிஷப் சலானி, ஸ்ரீபால் சலானி, தலைமைச் செயல் அதிகாரி சந்திரசேகர், தலைமை நிதி அதிகாரி கணேஷ் பாபு, துணைத் தலைவர்கள் இளையராஜா மற்றும் மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வில் பேசிய சலானி குடும்பத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி, “ஜேசன் சஞ்சையை சலானி குழுமத்தில் இணைத்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். மேலும், இந்தக் கூட்டணி குழுமத்தின் வளர்ச்சிக்கும், எதிர்கால முன்னெடுப்புகளுக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய துணைத் தலைவர் இளையராஜா, சலானி குழுமத்தின் வளர்ச்சிப் பயணம் குறித்து பகிர்ந்துகொண்டதுடன், எதிர்காலத்தில் பல்வேறு முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜேசன் சஞ்சய் சலானி குழுமத்தின் புதிய விளம்பர தூதராக இணைந்திருப்பது குழுமத்தின் எதிர்கால வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.