அரசு வங்கிக் கணக்கில் இருந்து முறைகேடாக ரூ.22 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 7 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் லோகநாதன், அண்ணாதுரை, செல்லப்பாண்டியன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மோசடி செய்யப்பட்ட பணம் மொத்தம் 24 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட தொகையை எங்கு எங்கு மாற்றினார்கள் என்பது குறித்தும், இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.