திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நவம்பர் 12 முதல் 28-ம் தேதி வரை மாநகராட்சி எல்லைக்குள் வரும் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநகராட்சி குத்தகை கழிப்பறைகள் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள கழிப்பறைகளிலும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி யாரேனும் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பக்தர்கள் இதுகுறித்து புகாரளிக்க 74488 32392 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.