டெல்லி சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் அதிஷி ஆற்றிய உரையின் ஒரு பகுதியை டெல்லி பாஜக அமைச்சர் கபில் மிஸ்ரா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலானது. அதில் அதிஷி சீக்கிய குரு தேக் பகதூரை அவமதித்ததாகக் கூறி கண்டனம் வலுத்தது. டெல்லி மற்றும் பஞ்சாப் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே அதிஷியின் உரையை எடிட் செய்து அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அந்த வீடியோ பரப்பப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி புகார் அளித்தது. பஞ்சாபில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மத உணர்வுகளைத் தூண்டிவிடுதல் மற்றும் போலித் தகவல்களைப் பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி பாஜக அமைச்சர் கபில் மிஸ்ரா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோவின் உண்மைத்தன்மையைக் கண்டறிய தடயவியல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.