வனேஸ்வர் ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை மேலும் பலப்படுத்துவதற்காக ‘டிஎஸ்சி அர்ஜுன்’ (DSC Arjun) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் நவீன ரோபோ ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ஏழு 360-டிகிரி கேமராக்கள் பொருத்தப்பட்ட இந்த ரோபோ, நெரிசல்மிக்க பிளாட்பாரங்கள் மற்றும் நடைபாதைகளில் சுற்றியலைந்து கூட்டத்தைக் கண்காணிப்பதுடன், சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் மற்றும் உரிமையோரற்ற கைவிடப்பட்ட பைகளைத் துல்லியமாகக் கண்டறிகிறது. இதுமட்டுமன்றி, தீ விபத்துகளை உடனடியாகக் கண்டறிதல், நபர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுதல் மற்றும் முகத்தை அடையாளங் காணும் (Facial Recognition) தொழில் நுட்பம் மூலம் பழைய குற்றவாளிகளை அடையாளம் காட்டுதல் போன்ற அசாத்திய பணிகளையும் திறம்படச் செய்கிறது.
ஏற்கனவே உலகப் புகழ்பெற்ற புரி ரத யாத்திரையின் போது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட இந்த ரோபோ, தற்போது புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் நிரந்தரக் கண்காணிப்புக்குக் கொண்டுவரப்பட்டிருப்பது எதிர்கால ரயில்வே பாதுகாப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகப் பயணிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.