X

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 18 புரோ மேக்ஸ் விலை பற்றிய தகவல் வெளியானது

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வரவான ‘ஐபோன் 18 புரோ மேக்ஸ்’ (iPhone 18 Pro Max) ஸ்மார்ட்போன், முந்தைய ஐபோன் 17 புரோ மேக்ஸ் மாடலை விடக் கூடுதல் விலையில், இந்தியாவில் தோராயமாக ரு1,69,990 என்ற ஆரம்ப விலையில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிநவீன 2 என்எம் (2nm) தொழில்நுட்பத்தில் தயாராகும் ஏ20 புரோ பிராசஸர் (A20 Pro Chipset), மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (Apple Intelligence) அம்சங்கள், 12 ஜிபி ரேம் மற்றும் மாறுபடும் துளை வசதியுடன் கூடிய (Variable Aperture) கேமரா அமைப்பு போன்ற பிரீமியம் அம்சங்கள் இதில் இடம் பெறவுள்ளதால் இதன் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. \

இதனுடன் இறக்குமதி வரிகள் மற்றும் ஜிஎஸ்டி கட்டணங்களும் சேர்வதால், இந்தியாவில் இதன் ஆரம்ப மாடலின் விலையே இந்த புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது ஆப்பிள் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.