X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க. வரமுடியாது – கருணாஸ் பேச்சு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் சமத்துவம் பழகு என்ற தலைவர் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தலைவரும், நடிகருமான கருணாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததன் முக்கிய நோக்கம் தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்ற விடக்கூடாது என்பது தான். டி.டி.வி. தினகரன் மாறி மாறி பேசி வருகிறார். தமிழகத்தில் எந்த நடிகருக்கு வேண்டுமானாலும் விசிலடியுங்கள். எனக்கு அது பிரச்சனை இல்லை.

நீங்கள் அடிக்கின்ற விசிலை விட அதிக விசில் அடிக்கும் கூட்டம் எண்ணிடத்திலும் உள்ளது. கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்தில் முதலமைச்சராக வரவேண்டும் என்பது விஜய்யின் பேராசையை காட்டுகிறது. தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கே வருமான வரி கட்டாததை தமிழகம் மறக்கவில்லை.

இ.பி.எஸ். மீது எவ்வளவு குற்றச்சாட்டை சொல்லி அவரை ஆட்சிக்கு வரவிடமாட்டேன் என கூறி வந்த டி.டி.வி. தினகரன் இன்றைக்கு ஒன்றுமே இல்லையென்று கூறுகிறார். பங்காளி சண்டை என்று கூறுவதும் வேடிக்கையாக உள்ளது. படர் தாமரை உடம்புக்கு நாசம், ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம். பா.ஜ.க.வின் தாமரை நாட்டுக்கே நாசம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க. வரமுடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.