அமெரிக்க, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 7 வது நாளை கடந்துள்ள நிலையில், இன்று அதிகாலை பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது 5 ஆளில்லா விமானங்கள் மற்றும் ராக்கேட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போர் தொடங்கியதில் இருந்து நடத்தப்பட்ட மிக தீவிரமான தாக்குதலாக கருதப்படுகிறது.
இந்த தாக்குதலில், ஒரு ட்ரோன் தூதரக வளாகத்திற்குள் விழுந்து வெடித்ததில் தீப்பற்றியது. இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் தெற்கு லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளங்களை குறி வைத்து தரைவழி தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. எல்லையோர மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இதன் நோக்கம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் ஈரானின் தலைநகர் டெக்ரான், ஹமதான் மற்றும் இஸ்பகான் ஆகிய நகரங்களில் உள்ள ராணுவ இலக்குகள் மீது தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்கள் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் தனது வான் வழியை தற்காலிகமாக மூடி உள்ளது.
மேலும் துபாய் விமான நிலையம் மற்றும் பூஜைரா எண்ணெய் தொழில் மண்டலத்தின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹார்மோஸ் ஜல சந்தி கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பாக செல்வதற்கு நேட்டோ மற்றும் பிற நாடுகள் முன்வர வேண்டும் போர்க்கப்பல்களை வழங்குமாறு அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நட்பு நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இருப்பினும், இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட முக்கிய நட்பு நாடுகள் , ஒரு பெரிய தரைவழித் தாக்குதலுக்கு எதிராக எச்சரித்து, இந்தக் கோரிக்கைகளை பெரும்பாலும் நிராகரித்துள்ளன.
பாரசீக வளைகுடாவில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், உலகளாவிய எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு $100 ஐத் தாண்டி உயர்ந்துள்ளன . இந்தியாவில், போர் ஒரு குறிப்பிடத்தக்க சந்தை வீழ்ச்சியைத் தூண்டியுள்ளது, ஒரு வாரத்தில் சுமார் $240 பில்லியன் செல்வத்தை அழித்துவிட்டது.