ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை கூட்டு தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் இன்று 5-வது நாளாக நீடித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அத்துடன் சவுதி அரேபியா, யுஏஇ, பஹ்ரைன், குவைத் போன்ற வளைகுடா நாடுகள் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இருதரப்பிலும் இருந்து தாக்குதல் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த போர் வாரங்களை கடக்கும் என அஞ்சப்படுகிறது.
இன்று துருக்கி மீதும் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. துருக்கி நேட்டோ படையில் இருப்பதால் நேட்டோ வான்பாதுகாப்பு மூலம் ஏவுகணை வெற்றிகரமாக இடைமறித்து அளித்துள்ளது. இன்று 5-வது நாளாக ஈரான் மீது தாக்குதல் தொடரும் நிலையில், அந்நாட்டில் உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போது வரை 1045 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் பாதுகாப்பு, கடற்படை, ஆயுதங்களை அழித்து விட்டதாக டிரம்ப் தெரிவித்து வருகிறார். ஆனால் ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் ஈரான் விளைகுடா நாடுகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.