X

இடைத்தேர்தல் முடிவு – மதுராந்தகம், தாராபுரத்தை கைப்பற்றும் த.வெக!

மது​ராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மது​ராந்​தகம் தொகு​தி​யில் த.வெ.க. சார்பில் மரகதம் குமர​வேல், தி.மு.க. சார்பில் பரந்​தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்​பத், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகி​ராமன் மற்​றும் சுயேச்சை​கள் என மொத்​தம் 27 பேர் போட்டியிட்டனர். சுயேச்சை​கள் என மொத்​தம் 27 பேர் போட்டியிட்டனர்.

தாராபுரம் தொகு​தி​யில் சத்​தியபா​மா (த.வெ.க.), சுகன்​யா (தி.மு.க.), பானு​மதி (அ.தி.மு.க.), லட்​சுமணன் (இந்​திய கம்யூனிஸ்டு), கார்த்​திகா (நாம் தமிழர்) மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 22 பேர் போட்டியிட்டனர். தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்களை பொறுத்தவரை ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்பது பல ஆண்டுகளாக பேசப்பட்டும், மெய்ப்பிக்கப்பட்டும் வந்தன.

ஆனால் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் இதுவரை நடந்த இடைத்தேர்தல்களில் இருந்து சற்று வித்தியாசமான தேர்தல். ஆனால் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் இதுவரை நடந்த இடைத்தேர்தல்களில் இருந்து சற்று வித்தியாசமான தேர்தல். கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தாராபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சத்தியபாமாவும், மதுராந்தகத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மரகதம்குமரவேலும் வெற்றி பெற்றார்கள்.

வெற்றி பெற்ற இரண்டே வாரங்களில் இருவரும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தார்கள். கட்சி மாறியது மட்டுமல்ல இருவருமே மீண்டும் அதே தொகுதியில் த.வெ.க. வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டார்கள். இது மக்கள் மத்தியிலும், கோர்ட்டிலும் விமர்சிக்கப்பட்டது.

இந்த பரபரப்பான எதிர்ப்பார்ப்புகளுடன் இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 13 ஆயிரத்து 788 வாக்காளர்களில், 1 லட்சத்து 84 ஆயிரத்து 413 பேர் வாக்களித்து இருந்தனர். 86.26 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தாராபுரம் தொகுதியில் மொத்தம் உள்ள 2,23,306 வாக்காளர்களில் 1,79,314 பேர் வாக்களித்து இருந்தனர். 80.30 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

மதுராந்தகம் தொகுதியில் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாகவும், தாராபுரத்தில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டன. மதுராந்தகம் தொகுதியில் தொடக்கத்தில் இருந்தே த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலையில் இருந்தார். முதல் சுற்றிலேயே அவர் 3,571 வாக்குகள் பெற்று 960 ஓட்டுகள் முன்னிலையில் இருந்தார். அவரையடுத்து தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் 2-வது இடத்திலும், அ.தி.மு.க. வேட்பாளர் கணிதா சம்பத் 3-வது இடத்திலும் உள்ளார்கள்.

தாராபுரம் தொகுதியில் முதல் சுற்றில் த.வெ.க.வுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அ.தி.மு.க. முன்னிலை பெற்றது. அக்கட்சி வேட்பாளர் பானுமதி த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை விட 5 ஓட்டுகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்தார். தி.மு.க. வேட்பாளர் சுகன்யா 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

முதல் சுற்றில் அ.தி.மு.க. 2,639 ஓட்டுகளும், த.வெ.க. 2,634 ஓட்டுகளும், தி.மு.க. 2,019 ஓட்டுகளும் வாங்கி இருந்தன. தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 168 ஓட்டுகளும். இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் 70 ஓட்டுகளும், பெற்று இருந்தனர். 2-வது சுற்றின் முடிவிலும் அ.தி.மு.க. 592 வாக்குகள் முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து மாறி மாறி இரு கட்சிகளும் முன்னிலை வகித்தது. முதல் 4சுற்றுகளில் அ.தி.மு.க. முன்னிலையில் இருந்தது. 5-வது சுற்றில் த.வெ.க. முன்னிலை வகித்தது. இதனால் த.வெ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் கடும் போட்டி நிலவியது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் இந்த தொகுதியை கைப்பற்றப் போவது யார்? என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தேர்தலை பொறுத்தவரை பகல் 1 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளரை விட 12,430 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். தாராபுரம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா அ.தி.மு.க. வேட்பாளரை விட 9,636 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். இதன் மூலம் 2 தொகுதிகளிலும் த.வெ.க. முன்னிலையில் உள்ளது.