X

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ரசு சார்பில் கார் திட்டம்

தமிழகத்தில் கட்சிப் பாகுபாடின்றி அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் (MLA) அரசு சார்பிலேயே அதிகாரப்பூர்வ கார்கள் வழங்கி, அவற்றுக்கான எரிபொருள் மற்றும் ஓட்டுநர் செலவுகளுக்கு மாதாந்திர படி (Allowance) வழங்கும் யோசனையைத் தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

காட்டுமன்னார்கோவில் தொகுதி விசிக எம்.எல்.ஏ எல்.இ. ஜோதிமணி இதுகுறித்துப் பேரவையில் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து இத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் முதன்முறை சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி முழுக்கப் பயணிக்கவும், அதிகாரிகளைச் சந்திக்கவும் பஸ் மற்றும் வாடகை டாக்சிகளை நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளதால், GeM (Govt e-Marketplace) தளம் மூலம் கார்களைக் கொள்முதல் செய்து வழங்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மேயர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களுக்கு அரசு வாகனங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், எம்.எல்.ஏ-க்களுக்கும் இத்தகைய வசதி கிடைப்பது தொகுதிப் பணிகளை மேலும் விரைவுபடுத்த உதவும் எனக் கூறப்படுகிறது. எனினும், இது தற்போதைக்கு ஒரு திட்ட வரைவு மட்டுமே என்பதும், இன்னும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.