X

முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறாக பேசிய வழக்கு – திருவையாறு எம்.எல்.ஏ துணை ஆணையர் அலுவலகத்தில் ஆஜார்

தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆகியோர் குறித்து அவதூறாகவும் மரியாதைக் குறைவாகவும் பேசிய வழக்கில், திருவையாறு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று நேரில் ஆஜரானார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற திருமண விழா மேடையில், முதலமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசியதுடன் பெண் அமைச்சர் கீர்த்தனாவையும் தரக்குறைவாக விமர்சித்ததாக அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அனுப்பப்பட்ட சம்மனின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அலுவலகத்தில் ஆஜரான துரை சந்திரசேகரனிடம், காவல்துறை அதிகாரிகள் அடுக்கடுக்காக 46 கேள்விகளை எழுப்பித் தீவிர விசாரணை நடத்தினர். சர்ச்சைக்குரிய அந்தப் பேச்சு தொடர்பாக அவர் அளித்த அனைத்துப் பதில்களும் அதிகாரிகளால் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வாக்குமூலங்களின் அடிப்படையில் காவல்துறை அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.